ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக, பிரித்தானியா, கனடா, மலாவி, ஜேர்மனி, மொன்டேனெக்ரோ, வட மெசிடோனியா ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக 11 நாடுகள் வாக்களித்தன.

பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், கியூபா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பொலிவியா, எரித்திரியா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக, அதாவது பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

ஆர்ஜென்டீனா, ஆர்மேனியா, ஆஸ்திரியா, பஹாமஸ், பிரேஸில், பல்கேரியா, ஐவரி கோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மாலாவி, மார்ஷல் தீவுகள், மெக்ஸிகோ, நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா, யுக்ரைன், பிரிட்டன். உருகுவே ஆகிய 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை,

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter