அமானா வங்கி இடைக்கால ஆவண பங்கிலாபத்தை அறிவித்து அதன் பங்கிலாபப் பயணத்தைத் தொடர்கிறது

அமானா வங்கி வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 848.8 மில்லியனையும் வரிக்கு பின் இலாபமாக ரூபா 460.9 மில்லியனையும் 2019 ம் ஆண்டில் எட்டியதுடன் Q 1 2020 ல் இவை முறையே ரூபா 180.2 பில்லியனாகவும் ரூபா 129.8 பில்லியனையும் அமைந்தன. வாடிக்கையாளர் வைப்புக்களில் வங்கித்துறையில் அதிகப்பட்ச வளர்ச்சி வீதங்களில் உள்ளடங்கும் 16% வளர்ச்சியை 2019 ல் அடைந்த அமானா வங்கி Q 1 2020ல் 8% வளர்ச்சியைடைந்து ரூபா 77 பில்லியனை மொத்த வைப்பாக கொண்டிருந்தது.

ஜூன் 2020 ல் இலங்கை Fitch ரேட்டிங்ஸ் நிறுவனம் அமானா வங்கியின் தேசிய நீண்டகால கடன் தரப்படுத்தலை BB (lka ) யிலிருந்து BB + (lka) யாக உயர்த்தி சீர்படுத்தியதுரூபவ் வங்கியின் வளர்ச்சியையும் உறுதியான கிளையுரிமையையும் மேலும் வலுப்படுத்தியது. இலங்கையில் தேசிய தரப்படுத்தல் அளவு முறைகளை சீரமைத்த பின் Fitch ரேடிங்ஸின் புதிய கடன் தரப்படுத்தல் நாட்டின் வழங்குநர்களிடையே உள்ள கடன் தகுதிநிலையை பிரதிபலிக்க வெளியிடப்பட்டுள்ளது.

2018 லும் 2019 லும் தொடர்ச்சியாக இரு காசுப் பங்கிலாபங்களை வழங்கிய அமானா வங்கி ஒரு பங்கிற்கு எட்டு சத இடைக்கால ஆவனப்பாங்கிலாபத்தை இலங்கை மத்திய வங்கியின் அனைத்து வங்கிகளுக்கான காசுப் பாங்கிலாபத்தை கட்டுப்படுத்தும் பணிப்புரைகளுக்கு அமைவாக அறிவித்துள்ளது.

ரூபா 200 மில்லியன் தொகையான ஆவணப் பங்கிலாபம் வங்கியின் நிறுத்திவைத்த ஈட்டல்களில் இருந்து பங்கொன்று ரூபா 2 ஆக பெறுமதியிடப்பட்ட 25 பங்குகளுக்கு ஒரு பங்கென்ற விகித்தத்தில் வழங்கப்படுகின்றது .

ஆவணப் பங்கிலாபம் வழங்கப்பட்டதும் வங்கியின் பங்குகளின் எண்ணிக்கை 100,055,421 பங்குகளால் அதிகரித்து 2,601,446,155 ஐ எட்டும். பங்கிலாப பிரகடணம் குறித்து அமனா வங்கியின் தலைவர் ஒஸ்மான் காசிம் கூறுகையில்ரூபவ் ´2019 ஆம் ஆண்டில் நிலவிய சவாலான சூழலுக்கும் அதனைத் தொடர்ந்த 2020 ஆம் ஆண்டின் Covid-19 தொற்று நோய்க்கும் மத்தியில் எங்கள் நெகிழ்ச்சியான செயல்திறன் காரணமாக எமது தொடர்ச்சியான மூன்றாவது பங்கிலாபத்தை எங்கள் பெறுமதி உருவாக்கும் உபாயத்தின் பகுதியாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டில் முன்னெப்போதுமில்லாத நிலமைகள் இருந்தபோதிலும் எங்கள் பங்குதாரர்களுக்கு அவர்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக இந்த ஆவண பங்கிலாபம் மூலம் தொடர்ந்து வெகுமதி அளிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.´

சவாலான சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் நிதிவழங்கள் இடர்நேர்வு சுட்டளவுகளின் உறுதிப்படுத்தலின் காரணமாக வளர்ச்சியடைந்த முற்பனங்கள் ரூபா 58.4 பில்லியனாக அமைந்தது. வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூபா 90 பில்லியன் எல்லையைத் தாண்டி ரூபா 91.6 பில்லியனை அடைந்ததோடு வங்கியின் நிகர சொத்துக்களின் பெறுமதி பங்கொன்றுக்கு ரூபா 4.78 ஆக முன்னேறியது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் கொண்டுள்ளது. IsDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற (S&P, Moody’s & Fitch) பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

அமானா வங்கி ஒரு தனி நிறுவனமாகும். ‘OrphanCare’ Trust அமைப்பைத் தவிர அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள்ரூபவ் துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter