நாட்டில் டயர்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டுக்கு இதுவரையில் தீர்வு கிடைப்பெறவில்லை என கண்டி மாவட்ட டயர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறிய ரக வாகனங்களுக்கான 12 மற்றும் 13 அளவிலான டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் பி.டீ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற டயர்களின் எண்ணிக்கை குறைவானதால், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை விநியோகிக்க முடியாதுள்ளது.
மருதி கார், மருதி வேன், சிறிய ரக பாவூர்திகள் என்பனவற்றுக்கான டயர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில், இலங்கையில் டயர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கண்டி மாவட்ட டயர் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் பி.டீ. வீரகோன் தெரிவித்துள்ளார்.