அக்குறணை – “மக்கள்‌ மயமான, ஊருக்கு ஒரு பிரதேசசபை” ௮றிமுகமாகிறது

அக்குறணை பிரதேச சபை மக்கள்‌ மயமான ஊருக்கு ஒரு பிரதேச சபை என்ற தொடர்‌ நிகழ்ச்சித்‌ தட்டம்‌ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர்‌ இஸ்துஹார்‌ இமாமுதீன்‌ தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சித்‌ திட்டம்‌ குறித்து அவர்‌ மேலும்‌ கூறுகையில்‌,

அக்குறணை பிரதேச சபையின்‌ 2021 ஆம்‌ வருட வரவு செலவு திட்டத்திற்கு அமைய, ஊரிலுள்ள கிராமங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள்‌, அதிகாரிகளுடன் சென்று, மக்கள்‌ அறிந்து கொள்ள வேண்‌டிய அடிப்படை சட்டங்கள்‌ குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன்‌, ,மக்கள்‌ எதிர்‌ கொள்கின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்தும்‌ ஆராய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊருக்கு ஓரு பிரதேச சபை அறிமுக நிகழ்ச்சி, 20 ஆம்‌ திகதி (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல்‌ பகல்‌ 12.00 மணி வரை சர்வ மத தலைவர்களுடைய பங்கு பற்றுதலுடன்‌ அக்குறணை புளுகொஹொதென்னை, தாய்ப்‌ பள்ளியில்‌ நடைபெறவுள்ளது என்றார்‌.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter