கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 04 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில்  16 சுகாதார பிரிவுகளின் 27 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக  கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார எபா தெரிவித்தார்.

அவர்களில் களனியிலிருந்து 07 பேரும், வத்தளையிலிருந்து  06 பேரும், நீர்கொழும்பு மற்றும் தெம்பே பகுதியிலிருந்து தலா 3 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 5,211 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 78,202 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கம்பா மாவட்ட சுகாதார சேவைகளின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பில் பதிவாகியிருந்தனர்.

 அதன்படி,  பொரள்ளையில்  42 தொற்றாளர்களும்  மட்டக்குளியில் 32  தொற்றாளர்களும் 11 கிராண்ட்பாஸில் 11 தொற்றாளர்களும் உள்ளடங்களாக கொழும்பு மாவட்டத்தில் 138 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

இத்துடன் கம்பாஹா மாவட்டத்தில் 63 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில்  14 பேருக்கும் நேற்றையதினம் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது. 

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter