இன்று (25.11.2020) எதிர் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்த கருத்துக்கள்.
இன்று மாணவர்களும் பெய்ல் பரீட்சைத்தாளை தயாரித்த ஆசிரியரும் பெய்ல். பெய்ல் என்பதை நாங்கள் சமூகமயப்படுத்தியுள்ளோம். அதனை அரசாங்க தரப்பும் ஒப்புக்கொண்டு, எங்கள் வாத்தியார் பெய்ல் இல்லை பெய்ல் இல்லை என்று வாக்கு மூலம் கொடுக்க ஆரம்பமாகிவிட்டார்கள்.
இன்று உண்மைகளைச் சொல்லும் ஊடகங்களையும் தாக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி விட்டார்கள் என்பதை மக்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பெயர் கூற விரும்பவில்லை. இந்நாட்டில் சில கூலி ஊடகங்கள் இருக்கின்றன வேலி ஊடகங்களும் இருக்கின்றன. அரசாங்கத்திற்கு மார் அடிக்கின்ற கூலி ஊடகங்கள், இன்னும் சில ஊடகங்கள் மார் அடிப்பதற்கும் மேலதிகமாக கூவுகின்ற ஊடகங்களும் இருக்கின்றன. வேலி ஊடகங்கள் எனும் போது, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்கு, உன்மைகளுக்கான வேலியாய் இருக்கக்கூடிய ஊடகங்கள் இருக்கின்றன. அப்படியான ஊடகங்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு இந்த அரசாங்கம் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது, இதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்து அரசாங்கம் கடந்த முறை ஆட்சியில் இருந்த போது இந்த ஊடகங்களைத் திட்டமிட்டு கன்டித்து, நடவடிக்கை எடுத்து கடைசியில் அந்த ஊடக நிறுவனத்தை அழித்தொழித்து எரித்தது. எரித்தாலும் அந்த சாம்பலிலிருந்து மீண்டும் எழுந்து பீனிக்ஸ் பறவை போன்று முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களின் முன்னனி தொலைக்காட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
அதே போல் தான் எனது நண்பர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்து அவருடைய பத்திரிகை நிறுவனத்தையும் எரித்தது இதே அரசாங்கம் தான் அன்று ஆட்சியில் இருந்த போதுதான். ஆகவே ஜனநாயகத்தைப்பாதுகாப்பதற்கு, மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு நான்கு தூண்கள் இருக்கின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், இரண்டு பாராளுமன்றம், அடுத்தது நீதித்துறை நான்காவது பிரதித்துவம் தான் ஊடகம்.
கடந்த காலங்களில் 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் தமிழ் ஊடகவியலார்களாக இருந்திருக்கிறார்கள் அது உண்மை. ஆனால் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடக நிறுவனங்கள் மக்களுக்காக குரல் கொடுத்தவை. அப்படியான ஊடகங்களைத்தான் அரசாங்கம் தேடித் தேடி அழிக்கிறது. தனக்காக கூலிக்கு மார் அடிக்கும் ஊடகங்களுக்கு அரச விளம்பரங்கள் கிடைக்கின்றன, அரசாங்க பதவிகள் கிடைக்கின்றன, அரசாங்கத்தின் அனைத்து ஆதரவும் கிடைக்கின்றன. ஆனால் உண்மை பேசும் ஊடகங்களை இந்த அரசாங்கம் தேடித் தேடி அழிக்கின்றது. அதை மக்கள் புரிந்து கொண்டு அதற்காக மக்கள் அணிதிறள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த விடயம் எங்கள் ஜக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடக செயற்ப்பாட்டைக் கண்டு அரசாங்கம் பயந்துபோய் இருக்கிறது. வாத்தியாரும் பெய்ல் மாணவர்களும் பெய்ல், சேர் பெய்ல் என்பது இன்று நாட்டில் தேசிய ரீதியாக தாரக மந்திரமாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அன்று பாராளுமன்றத்தில் பார்த்தோம். அரசாங்கத்தின் முகாமில் இருக்கக் கூடிய ஹிஸ்புல்லாவின் பழைய பல்கலைக்கழகத்திற்கு 400 கோடி ரூபா பணம் வெளிநாட்டிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. உண்மை வெளியாகி இருக்குறது. தனக்கு தேவையான போது முஸ்லிம் அரசுயல்வாதிகளை அரவணைத்துக் கொள்வது, தேவை இல்லாத போது வெளியேற்றுவது, தேவையான போது அபான்டங்களைச் சுமத்துவது என்று அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கின்றது
முஸ்லிம் மக்கள் கொவிட்டினால் இறக்கும் போது, எரிப்பதா, புதைப்பதா என்ற சர்ச்சை வருகின்ற போது அதற்கு ஆதரவாக உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கின்ற விதிமுறைப்படி செயற்படுங்கள் என்று கூறும் போது, குழு அமைத்து முஸ்லிகளை சமாதானப்படுத்தியது. பார்த்தால் குழுவுமில்லை, அலி சப்ரியுமில்லை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது என்பது தான் உண்மையாகி விட்டது. அரசாங்கம் முஸ்லிம்களை இன ரீதியாக எதிர்த்தும், சாதுரியமாக ஆதரித்தும் தமது அரசியல் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் முன்னால் அமைச்சர் ரிஷாட் பதூர்தீனின் பணத்தைப் பெற்று ஜக்கிய மக்கள் சக்தி சமூக ஊடக செயற்ப்பாட்டை செய்து கொண்டிருப்பதாக அபான்டமாக பொய் கூறுகிறார்கள். இது வழமை போல சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடாகத்தான் பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.