இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொவிட் 19 தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளது என அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, COVID-19 இலிருந்து அதிக ஆபத்து அல்லது கடுமையான நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று பரிசோதனை கட்டம் ஒன்று மற்றும் இரண்டாம் கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதன் இறுதி செயல்திறன் முடிவுகளில் 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி 94% பயனுள்ளதாக இருப்பதாக Pfizer நேற்று அறிவித்த நிலையில் இது இன்று வெளி வந்துள்ளது.
மேலும் இது அடுத்த சில நாட்களில் அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி கண்டுபிடிப்புகளின் நிபுணர்களின் கூற்றுப்படி,
“சோதனையில் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட நிலையில் இதனை நிரூபிக்கின்றனர் என தெரிவித்தார். மேலும் மூன்று பிரிவு வயதினரிடம் (18-55, 56-79, மற்றும் 70 +) இது பரிசோதனை செய்யப்பட்டது.” சுமார் 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்கள் இரண்டாம் கட்ட சோதனைகளில் பங்கேற்றார், அங்கு அவர்களுக்கு தடுப்பூசி இரண்டு அளவுகள் வழங்கப்பட்டது.
சோதனைகளின் போது எந்தவிதமான மோசமான உடல்நலப் பிரச்சினைகளும் பதிவாகவில்லை என்று அறிக்கை கூறுகிறது.