நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரிசாத் பதியூதின் வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை நடைபெற்றது.
வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்
19வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதில் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது.
இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது நரித்தனத்தினால் கல்முனை பிரதேச செயலகத்தை இங்கிருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற ஆரிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய அதன் உறுப்பினர்கள் 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையுமில்லை. ஆனால் பலவந்தமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவீர்களானால் உங்களுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம்.
கிழக்கு மண் தமிழ் மக்களுடைய மண்ணாகும். எங்களுடைய போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த இந்த மண்ணை முஸ்லிம்களை ஆளவிடமாட்டோம்.
முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென அசாத் சாலி கூறுகின்றார். இது முஸ்லிம் நாடல்ல. இது சிங்கள பௌத்த நாடாகும். இந்த நாட்டிற்குள்ளே இருப்பது ஒரே சட்டமாகும்.
அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமாகும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது இறந்த உடல்களிலிருந்து வெளிப்படும் நீரின்மூலம் கொரோனா நோய் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துமென சுகாதார பிரிவினர் கூறுகின்றனர்.
ஆனால் புத்தளத்திலோ மன்னாரிலோ அடக்கம் செய்யவேண்டும் என்கின்றனர். அப்படியானால் அங்கிருக்கின்ற மக்கள் வாழக்கூடாதா? அசாத்சாலி அவர்கள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரோடு இணைந்து செயற்பட்டவராவார்.
அவர் இரண்டு பக்கத்திற்கும் சார்பாக இருப்பவர். முஸ்லிம் மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடுபவர்களே இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாவர்.
இந்த நாட்டிலே முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு காரணமான ஹிஸ்புல்லா, ரிஷாத்பதியுதீன், அசாத்சாலி போன்றவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட வேண்டும். அது மாத்திரமல்ல எமது நாட்டிற்று செய்த துரோகத்திற்காக இவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ரிஷாத்பதியுதீன் வன்னியில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைத்தவர்.
அவர் முஸ்லிம் சமூகத்தினை புத்தளத்திலும் வில்பத்து காடுகளை அழித்து, இயற்கை வளங்களை அழித்து இந்த குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் கடந்த நான்கரை வருடங்களாக இந்த செயற்பாடுகளை ஊடகங்கள் மூடிமறைத்தன.
ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி. வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.