முஸ்லிம் பெண்ணின் ( முகம் மூடாத ) பர்தாவை கழற்ற கோரி பிரச்சினை படுத்திய , பெரும்பான்மையின பெண் காவலாளி ஒருவர் (தனியார் நிறுவன வேலையாள்) , குறிப்பிட்ட பெண்ணின் உறவினர் எடுத்த நடவடிக்கையால் மூக்குடை பட்டு தற்போது தொழிலையும் இழக்கும் நிலைக்கு உள்ளான சம்பவம் பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
பேராதனை வைத்தியசாலை சிறுவர்கள் பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ள சிறுவனை பார்வையிட சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பெரும்பான்மையின பெண் காவலாளி ஒருவர் பர்தாவை கழற்ற கோரி பிரச்சினை படுத்தி உள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அந்த இடத்தில் இருந்தே சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் , சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அப்பெண்ணின் உறவினரால் (முன்னாள் மனித உரிமை ஆர்வலர் ) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட காவலாளி பெண் இதற்கு முன்னரும் வைத்தியசாலைக்கு வரும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிராக பிரச்சினை செய்துள்ளதாக இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பெண்கள் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த உரிமை அமைப்பின் உறுப்பினர் ஹனீப் ஹாஜி அவர்கள் , “நாம் இவற்றை சிறு விடயமாக எடுத்து கண்டுக்காமல் விடும்போது , நமது பெரிய உரிமைகளில் கைவைக்க தொடங்குவார்கள். சிறு விடயம் என்றாலும் நாம் அவற்றுக்கு எதிராக சட்ட ரீதியாக போராடும் போது தான் இந்நாட்டில் சகல உரிமைகளையும் பாதுகாக்கவும் முடியும், அதேவேளை எமது உரிமைகளில் கை வைப்பவர்களை பின்வாங்க வைக்கவும் முடியும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் அவர்கள் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சம்பந்தபட்ட அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் விளக்கம் கோரி உள்ளார்.
அதேவேளை குறிப்பிட்ட பெண் காவலாளியின் தொழில் இழப்பு ஏற்படும் என்பவதால் அவரை மன்னித்து இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் கைவிடும் படி ஹனீப் ஹாஜி யிடம் காவலாளி சார்பில் ஒருவரால் கோரிக்கையும் முன் வைக்கப் பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலுள்ள விடயங்களை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பேராதெனிய வைத்தியசாலை வைத்திய அத்தியட்கருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.