இலங்கை கரையோர பகுதியில் கரையொதுங்கிய இராட்சத விலங்கினம்

கற்பிட்டி மற்றும் முந்தல் பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களில் நேற்று (14) இரண்டு பெரிய சுறா மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தளுவை கடற்பிரதேசத்தில் நேற்று (14) உயிரிழந்த நிலையில் அரிய வகை இனத்தைச் சேர்ந்த புள்ளிச் சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுள்ள குறித்த சுறா 15 அடி நீலம் கொண்டதாக காணப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு கடற்பிரதேசத்தில் சுமார் 16 அடி நீலமான மற்றுமொரு சுறா ஒன்று உயிருடன் கரையொதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கரையொதுங்கிய சுறாவை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு அங்கிருந்த மீனவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (15) குறித்த சுறா உயிரிழந்துள்ளதாக சின்னப்பாடு மீனவர்கள் தெரிவித்தனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter