இஸ்ரேலில் இறந்தவர்களின் பூதவுடல்களை நல்லடக்கம் செய்வதற்கான மயான வசதியை பெறுவதிலுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக ஜெருசலேமில் நிலத்தின் கீழ் 160 அடி ஆழத்தில் 230,000 சடலங்களை நல்லடக்கம் செய்யக்கூடிய வசதியுடன் பாரிய மயானமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த மயானத்திற்கு மின்தூக்கி உபகரணங்கள் மூலம் பிரவேசிக்க முடியும்.
அத்துடன் அங்கு சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வாகன வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன் அவ்விடத்தை கலைக்கூடமாக மாற்றும் வகையில் அருங்காட்சியகமொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த மயானத்திலான நல்லடக்க செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.