கொரோனாவால்.. 643 பில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள். (இந்த வருடம் 6 மாதம்)

இலங்கையில் தங்க நகை அடகு கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா தங்க நகை அடகுக் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பொதுமக்கள் இவ்வாறு தங்க நகை அடகுக் கடன் பெற்றுக்கொண்டுள்ளனர். சில நிறுவனங்கள் ஒரு பவுண் நகைக்கு 57000 ரூபா முதல் 60000 ரூபா வரையில் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்கள் ஒரு பவுணுக்கு அடகுக் கடன் தொகையாக 65000 ரூபா வரையில் வழங்குகின்றன.

மேலும் கடன் அட்டைப் பயன்படுத்தும் நபர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் அட்டை பயன்படுத்துவோரில் 41 வீதமானவர்கள் முறையாக கடனை செலுத்தத் தவறியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter