தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு மெலனியா டொனால்ட் ட்ரம்புக்கு ஆலோசனை!

அமெரிக்கவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்பின் உள் வட்டாரத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டு, தேர்தலை தோல்வியை ஒப்புக் கொள்ளுமாறு தனது கணவர் ட்ரம்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேர்தல் குறித்து மெலனியா பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் தனது கருத்தை தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் ச‍ேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த மாதம் மெலனியா தனது கணவரின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக பிரச்சாரம் செய்திருந்தார். 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகனும் அவரது மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் முன்னதாக தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்வது குறித்து ட்ரம்பை அணுகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப் ஜோ பைடனின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்கள‍ை முன்வைத்து வரும் நிலையிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

செனட்டராகவும் பின்னர் துணை ஜனாதிபதியாகவும் நான்கு தசாப்தங்களாக வொஷிங்டன் (வெள்ளை மாளிகை) நபராக இருந்த பிடென் 74 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். 

ட்ரம்பபை விட 4 மில்லயன் அதிக வாக்குகளை பெற்ற அவர், அமெரிக்க வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் பெற்றிடாத அதிகபடியாக வாக்குகளை பெற்றமையும் குறிப்ப்டத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter