இணக்கப்பாடின்றி முடிந்த, ஜனாஸா எரிப்பு விவகாரப் பேச்சு

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக, இன்று சனிக்கிழமை, 7 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தலைமையில், நடைபெற்ற இப்பேச்சில், முஸ்லிம்களின் தரப்பிலும் சிலர் பங்கேற்றனர்.

எனினும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பில், ஆர்வம் கொண்ட சுகாதார தரப்பு சார்பிலான சிலர், தொடர்ந்து இனவாத சாயம் நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்துள்ளனர்.

முஸ்லிம்கள் தரப்பில் பங்கேற்றவர்களோ, கொரோனா தொற்றினால் மரணித்த உடல்களை எரிப்பதால், எவ்வித பாதிப்பும் இல்லையென ஆதாரங்களை சமர்ப்பித்து, அழகான முறையில் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் இறுதி நிலைப்பாடோ அல்லது சாதகமான நிலைப்பாடுகளோ எட்டப்படவில்லை.

எதிர்வரும் காலங்களில் இதுபற்றி தொடந்து பேசுவது என, இணக்கம் காணப்பட்டதாக இது பற்றி தகவலறிந்த வட்டாரங்கள் எமது இணையத்திடம் உறுதிப்படுத்தின. -ஜப்னா முஸ்லிம்-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter