ஃபிச் ரேட்டிங்ஸ் ஸ்ரீலங்கா 2020 ஜுன் மாதத்தில் நடத்திய புதிய தரப்படுத்தல் மீளாய்வின் பிரகாரம், அமானா வங்கியின் தரப்படுத்தல் தேசிய நீண்டகாலத் தரப்படுத்தல் BB10 (lka) என்ற நிலையிலிருந்து உறுதியான எதிர்காலத்தைக் கொண்ட BB+ (lka) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள வழங்குநர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒப்பீட்டுக் கடன் தகுதிநிலை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைத் தேசிய தரப்படுத்தல் அளவீடுகளை மறுசீரமைக்கும் பிரகாரம் ஃபிச் ரேட்டிங்ஸ் அமைப்பு புதிய தரப்படுத்தல் மீளாய்வை மேற்கொண்டது.
தரப்படுத்தலின் உயர்ச்சி பற்றி அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொகமட் அஸ்மீர் கருத்து வெளியிடுகையில்,
“வங்கி தொழில்துறை சவால்களை எதிர்நோக்கும் இந்த வேளையில், ஃபிச் ரேட்டிங்கின் சமீபத்திய மீளாய்வின்; பிரகாரம் எமது தரப்படுத்தல் ஒரு படி முன்னேற்றப்பட்டமை எமக்குப் பெருமையளிக்கிறது. எம்மில் தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்திருக்கும் எமது வங்கியுடன் இணைந்து செயற்படும் அனைவருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். எமது வங்கியின் வைப்புகளில் 2019ஆம் ஆண்டில் 16 சதவீத வளர்ச்சியையும் 2020 இன் முதலாவது காலாண்டில் 8 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ள நாம்; எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பொருளாதாரத்தின் நிலையை முன்னேற்றுவதில் காட்டும் ஆழ்ந்த அக்கறைக்கு இது சான்றாகும்” என்று கூறினார்.
இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் கொண்டுள்ளது. IsDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி சார்ந்த நிதி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அமானா வங்கி ஒரு தனி நிறுவனமாகும். ‘OrphanCare’ Trust அமைப்பைத் தவிர அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் உப நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் எதுவும் கிடையாது.