அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து அரசாங்கம் நேற்று வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்களும் விற்பனையாளர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
சீரக சம்பா தவிர்ந்த வெளளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ 94 ரூபாவாகவும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை சம்பா அரிசி ஒரு கிலோ 94 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொட்டைக்கறுப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்று 92 ரூபாவாகவும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்று 89 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறிப்பினும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு அரிசியை விற்பனை செய்ய இயலாது என அரிசி ஆலை உரிமையாளர்களும்இ விற்பனைபாளர்களும் தெரிவித்துள்ளனர்.
98 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்திருக்கலாம்.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு விற்பனை செய்வதற்காக தங்களால் அரிசியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அரிசி விற்பனையை தாங்கள் இடைநிறுத்துவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.