வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா தளர்த்தும் என்று நாட்டின் மனிதவள துணை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.
மார்ச் 2021-ல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டங்களில், வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளிகளின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறும் உரிமை அடங்கும் என மனிதவள துணை அமைச்சர் Abdullah bin Nasser Abuthnain கூறினார்.
சவுதி தொழிலாளர் சந்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என Abdullah bin Nasser Abuthnain கூறினார்.
சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளில் செயல்படுவதாகவும், திட்டங்கள் தயாரானவுடன் அறிவிக்கப்படும் என கடந்த வாரம் சவுதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.