அமெரிக்கா தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற முதல் திருநங்கையாக இவர் இடம் பெற்றுள்ளார்.
இவர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பாக டெலாவேரி மாநிலத்தில் போட்டியிட்டு இவ் வெற்றியை ஈட்டியுள்ளார்.
31 வயதான சாரா மெக் பிரைட் ஒரு வழக்கறிஞர் ஆவார், இவர் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார்.
இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட்,
நாம் செய்து முடித்து விட்டோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடரும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி பத்திரிகை