வைத்திய கட்டளைச் சட்டத்திற்கு அமைவான இரண்டு கட்டளைச் சட்டங்கள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற தொலைத் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள வைத்திய சபையில் பதிவுச்செய்யப்பட்ட வைத்தியர்களாக பதிவுச் செய்யப்பட வேண்டுமாயின், குறைந்தது உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் இரண்து சி தரச் சித்திகளையும், ஒரு சாதாரண சித்தியை பெறுவது அடிப்படை தகைமையாக கொள்ளப்படும்.
இதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பை வெளியிட்டதுடன், வருடத்திற்கு வருடம் தகைமைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் வைத்திய கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல் இலக்கம் 2 கட்டளைச் சட்ட சடத்து குறித்து தெரிவுக்குழுவில் கலந்து பேசி திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதனை ஆளும் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஏற்கனவே தெரிவுக்குழுவில் பேசியவாறு குறித்த கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
ஏவ்வாறாயினும் திசாநாயக்கவின் எதிர்ப்பை பதிவுச்செய்த பின்னர் குறித்த இரண்டு கட்டளைச் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய விவாதத்தில் பதிலளிக்கும் வேளையில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, குறித்த இரு கட்டளைச் சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வது காலத்தின் தேவை என கூறினார்.
இதன்போது, வைத்திய சபை ஊடாக ரஸ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களில் பட்டங்களை வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல வினவினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், குறித்த விடயம் குறித்து தேடிப்பார்ப்பதாகவும் தற்காலிகமாக அந்த தடையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள 25 ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளதாகவும் அதன் ஊடாக நாளொன்னில் 8000 பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்தியமைப்பதற்கு பரந்தளவில் ஆராய வேண்டி ஏற்பட்டமையே காரணம் எனவும் அமைச்சர் கூறினார்.
கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கு முழுமையாக பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுவரையில் வெளிநாடுகளில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
உலக வங்கியிடம் இருந்து 128 மில்லியன் உதவி கிடைத்துள்ளதாகவும், அதனை 2023 ஆம் ஆண்டுவரை செலவழிக்கும் இயலுமை உள்ளதாகவும், அதில் 35 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சுகாதார தேவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், 22 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சுகாதார தேவைகளுக்காக செலவிட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டம் முழு இலங்கைக்கும் பொதுவானது எனவும் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறினார். Ada-Derana