கொவிட்19 இரண்டாம் அலை தற்போது பாரிய அளவு இலங்கையையும் தாக்கம் அடைய செய்துள்ளது. இதனால் கொவிட் தொற்று மரணமும் அதிகரித்து வரும் சூழ் நிலையும் நாம் நாளுக்கு நாள் அறிந்து கொண்டு இருக்கின்றோம். எனவே கொரோனா தாக்கத்தினால் மரணமடைந்த உடல்களை தகனம் செய்வது குறித்து
இது தொடர்பாக முஸ்லிம்களாகிய நாங்கள் குறிப்பாக 20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்த ஆறு சிறுபான்மை உறுப்பினர்கள் மேலும் இருக்கின்ற இன்னும் சில உறுப்பினர்கள் இணைந்து அரசாங்கத்துடன் கதைத்து சிறந்த முறையில் உடல்களை தகனம் செய்யாமல் புதைப்பதற்கு ஒரு வேளைதிட்டத்தை நாம் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நேர்காணலின் போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
சிலர் செய்யும் செயற்பாடே இதற்கு காரணமாகும் ஏனெனில் வீதி ஒழுங்கு போக்குவரத்து சட்டங்களின் ஒழுங்குமுறைகள் வழங்கினாலும் அதனை சரியான முறையில் கடைப்பிடிப்பதில்லை.
குறிப்பாக நாட்டில் உள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக தலைக்கவசம் (ஹெல்மட்) அணிந்து செல்லுமாறு சட்டத்தை பிரப்பித்தாலும் சிலர் அதில் அலட்சியப் போக்காகவே இருக்கின்றனர். எனவே கட்டாயம் இதனை கவனத்தில் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக கூறுகையில், இலங்கையில் சுகாதார அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை தான் அரசும் மக்களினதும் எமது முழு நாட்டினதும் பாதுகாப்பை கருத்திக் கொண்டே தகனம் செய்யும் முடிவிற்கு வந்துள்ளனர்
அமெரிக்கா, பிரேசில் ,இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையை விட கொவிட்19 தொற்று பரவும் நிலையும் மரணிக்கும் நிலையும் அதிகமாக காணப்படுவதை நாம் காண்கிறோம்.
சுகாதார அமைப்புக்கு மாற்றமாக அரசாங்கம் முடிவெடுக்குமானால் இம் மரணங்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் மீது குற்றம் சாட்டக் கூடியதும், அரசாங்கம் இதனை கட்டுபடுத்தவில்லை என்ற குற்றத்தை இவ் அரசாங்கம் சுமக்க வேண்டிய நிலை நேரிடும்.
அதே போன்று அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய முகக்கவசங்களை கூட சிலர் அதனை செய்வதும் அரிதாகவே காணப்படுகிறது.
கொவிட் தொற்று வைரசினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை கையளித்தால் அதனை குழுப்பாட்டுதல் என்ற மார்க்க விடயங்களை செய்யும் போது இதன் ஊடாக கொடிய வைரஸாகிய கொவிட்19 பரவல் அதிகரிக்க கூடும் என்றுதான் இவ் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அதிகாரிகள் ஊடாக இந்த முடிவினை எடுக்கப்படுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் எம்மை நாம் பாதுகாத்து கொள்ள இறைவன் ஒவ்வொருவருக்கும் அறிவையும் ஆற்றலையும் வழங்கியுள்ளான் எனவே அதற்குரிய பாதுகாப்பான முயற்சியையும் நாம் செய்ய வேண்டும் என இஸ்லாம் எமக்கு கூறியுள்ளது.
முஸ்லிம்களின் உடல்களை எரிக்காமல் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதனால் அங்கு மரணித்த உடலை குழுப்பாட்டுவோருக்கும் கொவிட்19 தொற்றக்கூடிய அபாயம் அதிகம் காணப்படும் பின்னர் நம் நாடே முழு சடலமாக இருக்க சந்தர்ப்பர்த்தை அது ஏற்படுத்தி விடும் எனவே இது குறித்து அரசுக்கோ சுகாதார அமைச்சுக்கோ ,அதிகாரிகளுக்கோ ஆளும்கட்சி தரப்பினருக்கோ தேவையற்ற விமர்சனங்களை சுமத்துவது நல்லதல்ல. முதலில் சட்டத்தினையே கடைபிடிக்க வேண்டும் அப்போதுதான் எம்மை இதனூடாக பாதுகாத்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.
மேலும், இனவாதத்தை சிலர் தூண்டினாலும் உண்மையில் எமது நாட்டு ஜனாதிபதி அவ்வாறான ஒருவரல்ல ஏனெனில் பலர் இக் கட்சியில் இணைய இருந்தும் 20வது திருத்ததி்ல் 06 முஸ்லிம்களை அவர்கள் ஆளும்கட்சிக்கு இணைத்து உள்ளனர் உண்மையில் அவர்கள் நினைத்து இருந்தால் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினர்களையும் இணைத்து கொள்ளாமல் இணைய தயாராக இருந்த பெரும்பான்மையானவர்களை பிற கட்சியிலிருந்து உள்வாங்கி இருக்கலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவே இதிலிருந்தே அவர்கள்கள் இனவாதியான கட்சி அல்ல என்பதனை நிரூபித்திருக்கின்றார்கள். அதே போன்று எதிர்கட்சி தரப்பான சஜித் ப்ரேமதாசாவின் கட்சி ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமும் இவ் அரசாங்கத்தில் உள்வாங்கப்பட்டிருக்கிறது.
எதிர்கட்சியையும் மட்டம் தட்டாமல் எதிர்கட்சியினுடைய ஆலோசனையும், எதிர்ப்பையும் உள்வாங்கி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பெடுப்பதற்காக அந்த பலமான ஒரு எதிர்கட்சியையும் செயலிழக்காமல் செய்வது ஒரு குறிப்பிடதக்க விடயமாகும்.
நல்ல பலமான எதிர்கட்சி, பலமான அரசாங்கமும் 20ம் திருத்தத்திற்கு பின் அமைந்திருக்கிறது என்பதும் முக்கியமான ஒரு விடயமாகும்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 20ம் திருத்ததிற்கு ஆதரவளித்து இணைந்த 06 முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் ஒரு இனவாதிகள் அல்ல இவ் அரசுக்கு எதிரானவர்களும் அல்ல என்ற விடயத்தை அரசுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் நாங்கள் நீரூபித்து காட்டியுள்ளோம்.
அத்தோடு இக்கட்சிக்கு ஆரதவழித்த வகையில் மக்களுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் முன்மாதிரியாக நாம் ஒத்துழைப்பு வழங்கினோம் என புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.