சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறிய39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் சமூக இடைவெளி பேணாதோர் மற்றும் முகக்கவசங்கள் அணியாதோரை கைது செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் இத்தகைய நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் களுத்துறை, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.