“Covid 19” சம்பந்தமாக அக்குறணை ஜம்மியத்துல் உலமாவின் அவசர அறிவித்தல்

“Covid 19” சம்பந்தமாக அக்குறணை ஜம்மியத்துல் உலமாவின் அவசர அறிவித்தல்

தற்போது நாட்டில் கொவிட் – 19″ வைரஸின் பரவல் தொடர்ந்தும் அச்சுருத்தி வரும் இந்நிலையில் நாம் மிக அவதானமாகவும், பாதுகாப்பாகவும் செயற்படுவது எமது கடமையாகும். இக்காலங்களில் அரசினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதுடன் அக்குறனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அக்குறனை அஸ்னா மஸ்ஜித் சம்மேளனத்தின் வழிகாட்டல்களையும் பேணி நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

01 இக்கால சூழ் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கினங்க ஜும்ஆ மற்றும் ஐவேளைத் தொழுகைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்துதல்.

02 வெளிப் பிரதேசத்திலிருந்து கடந்த ஒருவார காலத்திற்குள் தொழிலிருந்தோ அல்லது குடும்ப விஜயங்களுக்காகவோ அக்குறணை பிரதேசத்திற்கு வந்தவர்கள் கட்டாயமாக தன்னையும் தனது குடும்பத்ததையும் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவும்,

03 திருமண ஒன்றுகூடல் உட்பட சமூக ஒன்றுகூடல் அனைத்தையும் முற்றாகத் தவிர்ந்து கொள்ளவும்.

04 ஜனாஸாக்களில் பிரதேசத்திற்குற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரம் கலந்த கொள்ளவும்,

05 வழமைபோல் கடைகள் திறந்திருப்பதால் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். எனினும் இக்கால சூழ்நிலையில் வயோதிபர்கள், நோயாளிகள், பெண்கள், சிறுவர்கள் கடைவீதி மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவும்.

06 அவசியமின்றி வெளியில் செல்வதை முற்றாகத் தவிர்த்தல், வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்வசம் (Mask) அணிந்து கொள்ளல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பேணல், கைகளால் அடிக்கடி முகக்கவசத்தை தொடாதிருத்தல் மற்றும் அவசரமாக வீடுகளுக்கு திரும்புதல்.

07 ஒவ்வொருவரும் இத்தகைய வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறவும், நாட்டு நலனுக்காகவும், அனைத்து மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகவும் துஆ பிராத்தனையில் ஈடுபடுதல்.

மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி நடப்பது எம்மையும், எமது ஊரையும் மற்றும் எமது சமூகத்தையும் இந்நோயிலுருந்து பாதுகாப்பதும் மேலும் சன்மார்க்க கடமையுமாகும் என்பதனை உணர்தல்

செயலாளர் அக்குறணை ஜம்இய்யதுல் உலமா
செயலாளர் அக்குறணை பள்ளிவாசல்கள் ஒன்றியம்
30.10.2020

Hotline: 0776488874
E-mail: akjulama@gmail.com

Akurana, corona, update, news, jammiyathul, ulama, today

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter