சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச மருத்துவ அதிகாரிகள் (MOH) பிரிவுகளுக்கேற்ப இவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய அதிகூடிய அபாயமுடைய பகுதிகளாக யாழ் மாவட்டத்தில் வேலணை மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளும் , வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் , ஆனைமடு மற்றும் முந்தளம் ஆகிய பகுதிகள் அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தளையில் பஸ்கொட மற்றுட் பெல்லேபொல, வில்கமுவ என்பனவும் அம்பாறை மாவட்டத்தில் மகாஓயாவும் அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தில் மெதகம அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல மற்றும் ரன்வெல, கண்டியில் யடிநுவர மற்றும் கங்காவத்த, நுவரெலியாவில் பம்பரதெனிய ஆகியவை அபாயமுடைய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, நாரம்மல, பன்னல, அலவ்வ மற்றும் பொல்கஹாவெல அபாயமுடைய பகுதிகளாகும்.
கம்பஹாவில் மீரிகம, திவுலபிட்டி, கட்டான, சீதுவ, மினுவாங்கொடை, வத்தளை, ஜா-எல, அத்தனகல, வேயங்கொடை, கம்பஹா, றாகம, களனி, தொம்பே, பியகம, கிரிந்திவெல மற்றும் பூகொட ஆகியவை அபாயமுடைய பகுதிகளாகும்.
கொழும்பில் கடுவலை, கொத்தொட்டுவ, கொலன்னாவை, பத்தரமுல்ல, புறக்கோட்டை, நாவல, கஹதுட்டுவ, பிலியந்தல மற்றும் வத்துவ ஆகிய பகுதிகள் அபாயமுடையவையாகும்.
களுத்துறையில் மத்துகம, அம்பாந்தோட்டையில் சூரியவௌ ஆகிய பகுதிகள் அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.