கட்டாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பீபா வெளியிட்டுள்ளது.
கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டி 2022 இல் கத்தாரிநடைபெறவுள்ளது. 8 மைதானங்களில் 28 நாட்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தொடரின் குழு நிலை சுற்றுப் போட்டியில் நாளொன்று நான்கு போட்டிகள் நடத்த திட்மிடப்பட்டுள்ளது. கட்டா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும் , மாலை 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும் போட்டிகள் ஆரம்பமாகும். இலங்கைக்கும் கட்டாருக்கும் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நேர வித்தியாசம் காணப்படுகிறது. உதாரணமாக கட்டாரில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நவம்பர் 1 ஆம் திகதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதான அரங்கில் போட்டி நடைபெறும்.
டிசம்பர் 18 ஆம் திகதி 6 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.