நாளை (17) முதல் அனுமதியற்ற மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹானா.
ஊடகங்களுக்கு இன் று கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நடைபாதைகள் அல்லது வாகன நிறுத்துவதற்கான இடம் தவிர்ந்த ஏனைய இடங்களில், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
நடை பாதைகளிலும் பிரதான பாதையின் அருகிலும் வகனங்கள் நிறுத்தப்படும் போது நடைபாதையில் பாயணிப்பவர்களுக்கு ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.
எனவே விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது எனவே அவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் வகனத்தின் உரிமையாளர்கள் அல்லது சாரதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்கள் பொலிஸாரினால் எடுத்துச்செல்லப்படும் என எச்சரித்தார்.
அத்துடன் வேரொரு வாகனத்தின் உதவியுடன் உங்கள் வாகனம் இழுத்துச்செல்லப்படும் பட்சத்தில் அதற்கான செலவினத்தை வாகனத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டி ஏற்படலாம்.
மேலும் இவ்வாறு அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை தரித்து செல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், ரூபா 50,000 வரையிலான தண்டப்பணம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.