உண்மையில் கிழக்கு மாகாண தமிழ் இனவாத அரசியல்வாதிகள் போன்ற முட்டாள்கள் உலகில் இருக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்ட மாடுகளின் மேய்ச்சல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பதாகவும் இது கிழக்கு மாகாண ஆளுனருக்கு தெரிந்தே நடப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த மைத்திரி ஆட்சியில் மைத்திரி செய்த ஒரேயொரு நல்ல செயல் ஹிஸ்புள்ளா என்ற தமிழ் பேசுவபவரை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்ததாகும். அவரை நீக்க வேண்டும் என போராடியவர்கள் தமிழர்களாவர்.
சிங்களவர் ஒருவரால் நியமிக்கப்பட்ட ஆளுனருக்கு எதிராக போராடிய தமிழர்கள் அவர் நீக்கப்பட்டு சிங்களவர் ஒருவர் ஆளுனராக வர ஒத்துழைத்து விட்டு இப்போது சுடுகுது மடியப்பிடி என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.
ஹிஸ்புல்லா ஆளுனராக இருந்திருந்தால் இத்தகைய சட்டத்துக்கு முரணான குடியேற்றத்துக்கு அனுமதித்திருப்பாரா? என உலமா கட்சி தலைவர் கலாநிதி மௌலவி முபாரக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்புள்ளார். மேலும்,
அத்துடன் மாடு அறுப்பு தடை செய்யப்பட வேண்டும் என குரல் எழுப்பியவர்களுக்கும் தமிழர் பலர் ஆதரவாக இருந்தனர். அவ்வாறு மாடு அறுப்பு தடை சட்டம் வந்தால் மாடு வளர்ப்பது குறைந்து விடும். இந்த நிலையில் மாடுகளுக்கு மேய்ச்சல் தரை தேவையில்லையே என அரசு கூறி அவற்றை விவசாய பூமியாய் மாற்றுவதில் என்ன தவறு என கேட்டால் நிச்சயம் அது நியாயமாகவே தோன்றும். கிழக்கில் மாடு வளர்ப்போரில் 90 வீதமானோர் தமிழர்களும் சிங்களவர்களுமாகும்
இதைத்தான் சொல்வது தன் கண்ணை தானே குத்திக்கொள்வதாகும். முஸ்லிம் ஒருவர் ஆளுனராக இருப்பதா? எமது கண் போனாலும் எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர்.
தமிழரும் முஸ்லிம்களும் கிழக்கில் ஜனநாயக அரசியலில் ஒன்று படாத வரை கிழக்கை தமிழர்களாலும் காப்பாற்ற முடியாது என்றார்