வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை

வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகள், தங்களது வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக முறையொன்றை கையாள வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புக் கொண்டுள்ள நபர்களை கண்டறிவதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் பல முயற்சிகளை எடுத்துள்ளனர். அதற்கமைய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த தொற்றாளர்கள் வாடகை வாகனங்களை பயன்படுத்தியிருந்தால் , இதன்போது அவர்களுடன் இன்னும் நபர்கள் சென்றுள்ளார்களா என்பது தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் , இவ்வாறான வாடகை வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தங்களது வாகனங்களில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் தகவலை அறிந்துக் கொள்வதற்காக  முறையொன்றை கையாள வேண்டும். இதன்போது சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter