கொரோனாவுடன் வாழப் பழகுவோமா..?

ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளியை தொடர்ந்து பல பேருக்கு Corona Virus இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் சில பிரதேசங்கள் தற்பொழுது lock down செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து நாடு பூராவும் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மினுவாங்கொடையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது நோயாளி அடையாளப்படுத்த கூடிய எந்த ஒரு Corona நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை. ஆகவே சமூகத்தில் பரவியிருக்க சாத்தியம் இருக்கின்றது என்ற அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் அரசினால் விதிக்கப்படுகின்றன.

ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த corona வின் இரண்டாவது அலையினால் ஏற்படுத்தப்பட்ட உயிர்ச் சேதங்களும் பொருளாதார நெருக்கடிகளும் எதிர்பார்த்திராத அளவுக்கு பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஆனால் இந்த நாடுகள் தற்பொழுது இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன. தற்பொழுது ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியா மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கணிசமான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இறப்பு வீதமானது கணிசமான அளவில் குறைந்துள்ளது. 

இலங்கையில் தற்பொழுது கொரோனா வின் இரண்டாவது அலை ஆரம்பித்திருக்கின்றது என்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. தற்போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் positive அக உள்ளார். இதிலிருந்து நாம் அறியக்கூடியது என்னவெனில் பொதுமக்களிடையே இந்தக் Corona வைரஸின் தொற்று ஆனது ஒரு தொடர்ந்தேர்ச்சியாக குறைந்த அளவிலான தொற்று வீதமாக காணப்பட்டுள்ளது என்ன யூகிக்க கூடியதாக இருக்கிறது (Sustained low level infection). இது ஆடைத் தொழிற்சாலை இலிருந்து வெளிநாட்டு நபர்கள் ஊடாக இந்த cluster உருவாகியதா அல்லது இது சமூகத்திலே தொடர்ச்சியான குறைந்த அளவிலான தொற்று வீதத்தை உடைய இன்ஃபெக்ஷன் ஆக இருந்ததா என்ற விவாதங்களைத் தாண்டி பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய விடயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்தத் இரண்டாவது அலையின் தொடக்கப்பள்ளி எதுவாக இருந்தாலும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைமை ஒரு சமூக பரம்பல் (community spread) ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் அல்லது நாளை ஏற்படலாம் என்ற நிலைமையில் தான் இருக்கின்றது. 

இந்த குரோனா வைரஸ் உடனான 9 மாத கால அனுபவத்திலிருந்து இந்த மருத்துவ உலகம் பல விடயங்களை புதிதாக அறிந்து கொண்டுள்ளது. 

அதில் முக்கியமாக பொது மக்களுக்கு விளங்க கூடிய வகையில் சொல்வதாக இருந்தால் இந்த குரோனா வைரஸ் இனால் ஏற்படுத்தக்கூடிய நோய் தாக்கங்கள் அதன் பாரதூரமான விளைவுகள் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிடக்கூடியது வைரஸ் அளவு (Virus Load) நோயாளியின் ஏனைய நோய் நிலைமைகள் ( patients’ co morbidity) வைத்திய சேவையின் கொள்ளளவு ( health care capacity).

Virus load, அதாவது ஒரு நோயாளிக்கு இந்த குரோனா தொற்று ஏற்படுகின்ற பொழுது உடம்பிலே தொற்றிக் கொள்கின்ற வைரஸின் எண்ணிக்கை அல்லது வைரஸ் தொற்றுதலின் பின்னர் அவர் உடம்பிலே உருவாகக்கூடிய வைரஸ்களின் எண்ணிக்கை. இந்த virus load ஆனது கூடுதலாக காணப்படுகின்ற போது பொதுவாக இது அதிகமான நோய் தாக்கங்களையும், சிக்கலான நிலைமைகளையும் உருவாக்குவதோடு ( Severe Pneumonia, Respiratory Failure, Cytokinin Storms and Systems Inflammation) , மற்றவருக்கு மிக விரைவாக தொற்றக்கூடிய தன்மையையும் ( high infectivity) கொண்டதாக காணப்படுகின்றது. virus load குறைவாக காணப்படுகின்ற போது அது சாதாரண தடிமன் காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான நோய் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. 

தற்பொழுது நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் ஆடை நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானவர்களும் ஆங்காங்கே ஒரு சில நபர்களும் PCR positive வாக கண்டுபிடிக்கப்பட்டாலும் கிட்டத்தட்ட எல்லோரும் எவ்வித நோய் அறிகுறிகளும் அற்றவர்களாகவும் அல்லது சிறிய தடுமல் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளை உடையவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் உதாரணமாக இவர்களுக்கு தொற்றியுள்ள வைரசின் அளவு குறைவாக காணப்படலாம், இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றன வைரஸின் வகையானது வீரியம் குறைந்ததாக இருக்கலாம், அல்லது சுகதேகியாக போதிய நிற்பீடண சக்தி உடையவர்களாக இருக்கலாம். ஆனால் கொரோனா வின் சமூக பரம்பல் அதிகரிக்கின்ற பொழுது இந்நிலைமை மாறுபடும், மேலும் ஒருவருக்கு தொற்றக்கூடிய வைரசின் அளவை கட்டுப்படுத்த முடியாது போகும். சமூக பரம்பல் அதிகரிக்கின்ற பொழுது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றுகின்ற virus load யின் அளவும் அதிகரிக்கும், அது மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்ற நோய் தாக்கங்களும் அதிகரிக்கும், வைத்தியசாலைகள் நிரம்பி வழியும், கடைசியில் அதிகரித்த மரணங்களும் ஏற்படலாம்.. 

இவ்வாறான ஆபத்தான நிலைமை ஏற்படுவதிலிருந்து தங்களை, தங்களது குடும்பத்தை, தனது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. பொதுவாக மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் இவ்வாறான நோய்த்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் ஓரிரு மணித்தியாலங்களில் மிக விரைவாக பரவி விடும் அபாயம் உள்ளது.

ஆகவே சமூகப் பரம்பலை தடுப்பதற்காக ஒவ்வொருவரும் சில சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தேர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும். மார்ச் ,ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில் corona வின் நோயின் பரம்பல் அதிகமாக இருந்த பொது மக்கள் கடைப்பிடித்து வந்த சுகாதார பழக்க வழக்கங்களில் தளர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இது ஆபத்தான நிலையாகும். இலங்கையில் Corona ஓரளவுக்கு கட்டுப்பாடுக்குள் இருந்ததற்கான முக்கிய காரணம் இலங்கை தீவை உலக நாடுகளிலிருந்து தனிமைப் படுத்தியது. ஆனால் இந்த முறைமை எவ்வளவு காலத்துக்கு சாத்தியமாகும்?? உலகளாவிய ரீதியில் கொரோனா வின் தாக்கம் முற்றுமுழுதாக முடியும் வரை விமான நிலையங்களை மூடி வைத்திருக்க முடியுமா? எப்போதாவது, குறைந்த அளவிலாவது வெளி நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கள் ஏற்படுகின்ற பொழுது இவ்வாறான புதிய புதிய Corona clusters உருவாகும்.

ஆகவே இந்த கொரோனவைரஸ் இன் தாக்கம் உலகத்தில் இருந்து முற்றுமுழுதாக மறையும்வரை இலங்கைத் தீவுக்குள் வாழ்கின்ற மக்களாகிய நாம் தொடர்ச்சியாக சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல் வேண்டும். இந்த corona தொற்றிலிருந்து நாங்கள் முற்றுமுழுதாக ஓடி ஒளிய முடியாது. Corona வைரஸ் தொற்றானது குறைந்த அளவில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போதும் அது அவருக்கு அதிகளவான நோய் நிலைமை ஏற்படுத்துவதில்லை மேலும் மேலும் குறைந்த வைரஸ் (low virus load) நோய்த்தொற்றை ஏற்படுத்தும் போதும் அது நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி Corona க்கு எதிரான நோய் தடுப்பு சக்தியை உருவாக்குகின்றது. 

ஆகவே நமது சுகாதார பழக்கவழக்கங்கள் Corona virus தொற்றிலிருந்து நம்மை முற்று முழுதாக பாதுகாப்பதாகவும் , ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தொற்று ஏற்படும் பட்சத்தில் அந்த வைரஸ் அளவை குறைப்பதாகவும், நோய்த் தடுப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலும் சமூக மட்டத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வீதத்தில் இந்த Corona வைரஸ் பரவுமேயானால் காலப்போக்கில் இந்த சமூகம் Corona க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ( herd immunity) உடைய சமூகமாக மாறும். இவ்வாறாக குறைந்தளவான வைரஸ் (low virus load) தொற்றுக்கு உள்ளாகி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்ட நபர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கின்ற பொழுது தான் இந்த Corona வின் தொற்றும் தன்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஆகவே கொரோனாவுடன் வாழ பழகுவதன் மூலமே இந்த Corona வின் பயத்திலிருந்து விடுபட முடியும்….

எவ்வாறு கொரோணவுடன் வாழ பழகுவது??

+ கொரோனா தொற்றுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளல்..

• அவசியம் இன்றி வெளியில் செல்லுவதை தவிர்த்தல்

• வெளியில் செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிந்து கொள்ளல்

• அடிக்கடி சவக்காரம் போட்டு / sanitiser மூலம் கைகளை கழுவிக்கொள்ளுதல்.

• கைகளால் அடிக்கடி முக கவசத்தை தொடாதிறுத்தல்.

• பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல்.

• பொது விழாக்கள் , திருமணம், மரணம் போன்ற நிகழ்வுகளின் போது நபர்களின் எண்ணிக்கையை மிக குறைந்த அளவிற்கு குறைத்தல், மேலும் சுகாதார வழிமுறைகளை பேணுதல்.

• பஸ்களில், கடைகளில் , வீதிகளில், வணக்கஸ்தளங்களில் சுகாதார வழி முறைகளை பின் பற்றுவதொடு , 1 மீட்டர் இடைவெளியை பேணுதல். 

• கடைகளில் , அலுவலகங்களில், பஸ்களில், எனைய போது இடங்களிலுள்ள கை பிடிகளை அடிக்கடி sanitiser யினால் சுத்தம் செய்து கொள்ளல். 

• தடிமன் , இருமல், மூக்கு வடிதல், போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் வெளியே செல்லுவதை முற்றாக தவிர்த்தல்.

+.  நம்மை அறியாமல் தொற்று ஏற்படும் பட்சத்தில் அந்த வைரஸ் அளவை குறைத்தல்.

• Corona virus family ஆனது respiratory virus , அதாவது இது சுவாச தொகுதியை (மூக்கு, தொண்டை, குரல்வளை, சுவாசப்பை) அடையும் போது தான் அங்குள்ள உயிர் உள்ள கலங்களின் பகுதிகளை பயன்படுத்தி அதிகளிலான virus துணிக்கை களை இனப்பெருக்கிக் கொள்கிறது. குறித்து எண்ணிக்கையான virus துணிக்கைகளை உருவாக்கிக் கொண்டதன் பின் Corona virus தனது ருத்ர தாண்டவத்தை ஆரம்பிக்கிறது. 

• Corona virus உள்ள ஒருவர் அருகாமையில் இருந்து தும்மும் போது இறுமும் போது வெளியில் விட்ட virus ஐ நேரடியாக சுவசிப்பதன் மூலம், அல்லது virus உள்ள ஏதாவது ஒரு இடத்தை தொட்டு விட்டு, அந்த கையால் மூக்கு, வாய் போன்ற பகுதிகளை தொடுவதன் மூலம் நமக்கு வைரஸ் தொற்றிக் கொள்கிறது.

• நாம் சில பழக்க வழக்கங்களை தொடரச்சியாகச் செய்து வருவேமேயானால், ஏதோ ஒருமுறையில் தற்செயலாக Corona virus நமது கையையோ, சுவாச தொகுதியையோ வந்தடைந்தாலும், Corona virus நமது உடலை அடைந்த உடனே அது அகற்ற படுவதற்கும் அல்லது virus load ஆனது மிகவிறைவாக பெருகுவதிலிருந்தும். தடுப்பதக்கும் ஏதுவாக இருக்கும்.

• அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுதல்.

• வெளியில் சென்று வந்தால் உடனடியாக கைகளை கழுவிக்கொள்ளுதல், மேலும் இதமான சூடான நீரினால் வாயையும் தொண்டை யையும் கழுவி கொள்ளுதல், மேலும் இளம் சூடான நீரினை பருகுதல்.

• ஆவி பிடிக்கும் பழக்கத்தினை வழக்கப் படுத்திக் கொள்ளுதல். 

• குளிர் நீர், குளிர்ந்த பானங்களை இயன்ற வரை தவிர்ந்து கொள்ளல்.

• முகத்தில் மீசை, தாடி உள்ளவர்கள் சுத்தமாக வைத்திருப்ப தோடு, அடிக்கடி சவர்காரம் கொண்டு சுத்தம் செய்து கொள்ளல்.

• ஒரே முககவசத்தை தொடர்தெச்சியாக அணிவது கூடாது. 

• முக கவசம் புதிதாகவும், சுத்தமானதாவும் இருக்க வேண்டும். 

• தடிமன் , இருமல் மூக்கு வடிதல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் , கைகளை கொண்டு கண்களை கசக்குதல், மூக்கு சீருதல் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்..

• தொண்டை நோவு, தடிமன், இருமல் போன்ற போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உப்பு கலந்த இதமான சுடுநீரில் நாளைக்கு நான்கு ஐந்து தடவைகள் தொண்டையை கழுவி சுத்தம் செய்தல் ( salt and warm water gargle)

 + நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

• நாட்பட்ட நோய்களை உடையவர்கள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களாக காணப்படுவார்கள். இவ்வாறானவர்கள் சுகாதார பழக்கவழக்கங்களை பேணுவததோடு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய மருந்துகளை பேணுதலாக எடுக்க வேண்டும். 

• கருஞ்சீரகம், கொத்தமல்லி, பஸ்பங்குவ, இஞ்சி , போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய துணை உணவுகளை உணவாகவே, குடி பானங்களாக எடுக்கும் பழக்கத்தை வழக்க படுத்தி கொள்ள வேண்டும்.

• உடற்பிற்சி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். உடற்பயற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. – Dr. S. Ahamed Fareed –

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter