பன்றி, உடும்பு, மீன்களை கொன்று புசிப்பதையும் தடை செய்தல் வேண்டும்

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒமல்பே சோபித தேரர் அவரகளிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். உணவுக்காக மாடுகளை அறுப்பது என்பது மனவருத்தத்திற்குரிய விடயம்தான். அதுபோல் ஆடு கோழி மான் மரை முயல் பன்றி உடும்பு போன்ற மிருகங்களையும் மற்றும் மீன் வகைகளையும் உணவிற்காக கொன்று புசிப்பதையும் கட்டாயம் தடை செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் இனத்திற்காக மாத்திரம் இந்தத் தடை கொண்டு வரப்பட்டது என்ற நிலைமை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவை எல்லாம் மிருகவதைக்குக்கீழ்த்தான் வருகின்றன. இதனை நான் பகிடிக்காக எழுதவில்லை. உண்மையைத்தான் கூறுகின்றேன். உணமையில் இந்த மாடு அறுப்பு முஸ்லிம்களை மையப்படுத்தித்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மனோ கணேசன் ஐயா அவரகள் குறிப்பிடுவதுபோல் மாட்டிறைச்சி என்பது இலங்கையின் தேசிய உணவாக மாறியுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாட்டின் சகல மக்களும் இதனால் பாதிக்கப்படுவர் என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம்கள் இதனால் வருந்தவும் இல்லை. அத்துடன் இதனைச் சட்டமாக்க வேண்டாம் என்று யாருடைய காலிலும் அவர்கள் விழ மாட்டார்கள். விழ வேண்டிய அவசியமும் இல்லை.

மாட்டு இறைச்சி உண்பதனைத் தடை செய்ய வேண்டுமா அல்லது மாடு அறுப்பதனை தடைசெய்ய வேண்டுமா என்ற மாயை ஒன்று மக்களிடம் இருக்கினறது. மக்கள் இதனைத்தான் உண்ண வேண்டும் என்ற சட்டத்தை மக்களிடம் திணிக்க முடியாது. ஒரு பேச்சுக்குச் சொல்ல விரும்புகின்றேன். மக்களின் எதிர்ப்புகளை மீறி மாடு அறுப்பதனை தடை செய்யத்தான் வேண்டும் என்ற நிலைமை வருமாக இருந்தால் அதே சமயம் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதனையும் அரசு ஏற்றுக் கொண்டால் அதற்கு அதி சிறந்த பரிகாரம் இதுவாகும்.

மாட்டிறைச்சியினை ஏற்றுமதி செய்யும் அண்டை நாடாக இந்தியா விளங்குகின்றது. ஒரு வருடத்திற்கு பல இலட்சம் மெட்றிக் தொன் மாட்டிறைச்சி அங்கே உற்பத்தி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தியா பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா போன்ற நாடுகளில் அவரகளது நிலத்தில் மாட்டுத்தொழுவத்தினை (வாடகை அடிப்படையில்) நாங்கள் வாங்கி எங்களுடைய மாடுகளை அங்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து இறைச்சியினை இங்கு இறக்குமதி செய்தால் கீழ்வரும் மூன்று நன்மைகள் இலங்கைக்குக் கிடைக்கும்.

01 – வேறு வகைகளில் மாட்டு இறைச்சியினை இறக்குமதி செய்தால் பெருமளவில் அந்நிய செலவாணியை இழக்க நேரிடும். மக்களும் அதனை வாங்க பெரிதும் சிரமப்படுவார்கள்.

02 – எங்களுடைய மாடு எங்களுடைய இறைச்சி இதனால் பெருமளவில் வெளிநாட்டுச் செலவாணி வீணாகமாட்டாது.

03 – மேற்கூறப்பட்ட நாடுகள் எமக்கு நிலம் தர மறுத்தால் கச்சதீவினை இதற்காகப் பயன்படுத்த முடியும். 

இந்த முறையினைப் பின்பற்றுவதனால் மாட்டுக்கும் நோகாமல் கத்திக்கும் நோகாமல் விடயத்தை முடித்து விடலாம்.

மாட்டு இறைச்சியினை இறக்குமதி செய்து வினியோகிப்பது என்பது மிகவும் கஷ்டமான செயற்பாடு. புதிய தொழில் முயற்சி என்பதனாலும் இறைச்சிக்கான வருகை ஆறு மாதங்களால் பின் தள்ளப்படும் என்ற சூழ்நிலை இருப்பதனாலும் நுகர்வோர் தொகை மிக அதிகளவில் குறைய வாய்ப்பு உண்டு.

மாட்டிறைச்சியினை உண்பது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. தன்னுடைய உயிரையும் உடலையும் காப்பாற்றுவதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட உணவு எதுவாக இருந்தாலும் அது முஸ்லிம்களுக்குப் போதுமதானதாகும்.

இலங்கையின் வனப்பினையும் அதன் கலாசார மேம்பாடுகளையும் காப்பாற்ற வேண்டியது மதகுருமார்களின் தலையாய கடமையாகும். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரகளாக இருந்தாலும் சரிதான். மிக முக்கியமாக வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்தை நல்ல விசுவாசமுள்ள குடிமக்களாக மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து தற்போது மதகுருமார்களின் கைகளுக்கு தற்போது வந்துள்ளது. 

தற்போது எமது நாட்டில் எங்கு பார்த்தாலும் பத்திரிகைகளில் மது  மற்றும் போதைப் பொருள் பாவனைபற்றிய தொடர்  நிகழ்ச்சிகள் ஒளி ஒலி பரப்பப்படுவதனை மற்றும் இது சம்பந்தமான பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பினையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மாத்திரமன்றி திருட்டு சாராயம் உற்பத்தி கஞ்ஞாப் பொருள்கள் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் விபசார இல்லங்கள் கசினோ மற்றும் பல்வேறு வகையான சூதாட்ட நிலையங்கள் என்பன எல்லா நகரங்களிலும் மலிந்து இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை மட்டுமன்றி காட்டு மிருகங்களை திருட்டுத்தனமாக வேட்டையாடி அதனது இறைச்சியையும் பயன்படுத்தும் நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. எனவே மதகுருமார்கள் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

-By: M.I.Y. Suhood-

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter