வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களில் பெறுமதியானது 10 பில்லியன் ரூபாவாகும்.
கொரோனா தொற்று நோயால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக இலங்கை தற்போது நாணய மாற்று நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
நாணய பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
தற்போது சுங்கம் வசம் உள்ள 300 வாகனங்கள் தடை இருந்தபோதிலும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தடையுத்தரவினை மீறி வாகனங்களை இறக்குமதி செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் வரி விலக்கு அளிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் வாகனங்களும் இந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.