இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 28,498 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 553 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 12 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள மூன்றாவது நாடாக பதிவாகியுள்ள இந்தியாவில் மொத்தமாக 906,752 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 23,727 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது.