அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கும் கோவிட் -19 சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்ததாக அறிவித்ததை அடுத்து இன்று உலக சந்தைகளில் தங்க விலை உயர்ந்தது .
தங்கம் 0.4% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 1,913.90 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது,
வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 0.9% உயர்ந்து 23.9992 டாலராக உயந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவர் மனைவி “எங்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தொடங்குவோம்” என்று ட்வீட் செய்ததைத் தொடர்ந்து, டவ் 1.5% க்கும் மேலாக சரிந்த நிலையில், மற்ற பொருட்களில் எண்ணெய் மற்றும் செப்பு விலைகள் இன்று சரிந்தன .
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க விமான பயணங்களில் கட்டுப்பாடுகள் செலுத்தப்பட்டதால் தங்கம் விலை இந்த ஆண்டு அதிகரித்தது.
ஆகஸ்டின் பின்னர் கடந்த எட்டு வாரங்களில் டாலருக்கு மத்தியில் தங்கத்தின் விலை குறைந்தது.
உலகின் சில பகுதிகளில் கோவிட் 19 தொற்றுக்கள் மீண்டும் அதிகரிக்கின்றன., மேலும் அமெரிக்கத் தேர்தலுக்கு செல்லும் நிச்சயமற்ற தன்மையும் உண்டாகி உள்ளது.
தங்க முதலீட்டாளர்கள் இன்று பிற்பகுதியில் வரவிருக்கும் மாதாந்திர அமெரிக்க தரவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கும் கோவிட் -19 சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்ததாக அறிவித்ததை அடுத்து இன்று உலக சந்தைகளில் தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது.