தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!

இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள். அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்…இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது… வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, “தும்மல்” எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.

அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் “God Bless You” (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான்.

தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.

முஸ்லிம் தும்மினால், “எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே” (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், “உனக்கு இறைவன் அருள்புரியட்டும்” என்று சொல்வான். இது தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல… 1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்?

உலகில் எவ்வளவு மிகப் பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே….இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்… universal principal..

சமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..

இறைவனால் மட்டுமே முடியும்… இஸ்லாம் சான்று பகிகின்றது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Check Also

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

Free Visitor Counters Flag Counter