உங்கள் போன் TRCSL இல் பதிவு செய்யப்பட்டதா? என்பதை எப்படி கண்டறிவது

உங்கள் போன் TRCSL இல் பதிவு செய்யப்பட்டதா ? இல்லையா என்பதனை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதனை விளக்கும் கட்டுரை இது.

உங்கள் போன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் (இலங்கையில்) வாங்கப்பட்டு இருந்தால், அது பெரும்பான்மையாக TRCSL இல் பதிவு செய்யப்பட்டதாகவே காணப்படும்.

மாறாக நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த போன் அல்லது வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த ஒருவரிடம் கொள்வனவு செய்து இருந்தால், உங்கள் போன் TRCSLஇல் பதிவினை கொண்டிருக்காது.

சரி இப்போது எப்படி எமது தொலைபேசியினை TRCSL இல் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா என்று பார்ப்போம்

முதலில் உங்கள் போனில் *#06# என்று டைப் செய்யவும். அப்போது தோன்றும் நிரலில் இலக்கம் 15 உடைய உங்கள் IMEI இலக்கத்தினை காட்டும்.

அந்த இலக்கத்தினை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் (சில போன்களில் COPY செய்தும் கொள்ளலாம்)

பின் உங்கள் SMS இற்கு சென்று..

IMEI<இடைவெளி>15 இலக்க IMEI இலக்கத்தினை டைப் செய்து 1909 என்ற இலக்கத்திற்கு SMS செய்யவும்

உதாரணம்:

Whats-App-Image-2020-09-30-at-4-44-24-PM

SMS அனுப்பி சிறிது நேரத்தின் பின் உங்களுக்கு இப்படியான ஒரு பதில் SMS வரும்.

Whats-App-Image-2020-09-30-at-3-53-10-PM
Whats-App-Image-2020-09-30-at-3-53-53-PM

இதில் Registered IMEI என்று வந்தால் உங்கள் போன் TRCSL இல் பதியப்பட்டு உள்ளது என்றும். மாறாக Unknown IMEI என்று வந்தால் உங்கள் போன் TRCSLஇல் பதியப்படவில்லை என்றும் அர்த்தமாகும்.

பதியப்படாத போன் உள்ளவர்கள் தற்போது ஏதும் செய்யவேண்டியதில்லை, மிக விரைவில் TRCSL பதியப்படாத போன்களுக்கான நடைமுறையினை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் என கூறியுள்ளது.

எனினும் இன்று முதல் புதிய போன் வாங்குபவர்கள் TRCSL இல் அங்கீகரிக்கப்பட்ட போன்களை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter