இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
கால்நடைகளை கொல்வது குறித்து கடந்காலங்களில் உள்ளுராட்சி அதிகாரசபைகள் நிறைவேற்றிய சட்டங்கள்விதிமுறைகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்தனை அதனை உண்பவர்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாயநடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத மாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.