ஆளும் கட்சியின் வலையில் சிக்கிய  3 சிறுபான்மை கட்சிகள்

மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள்  அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. 

இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ள நிலையில் குறித்த மூன்று கட்சிகளும் ஆளும் கட்சியுடன் இணைய உள்ளன. 

இதன்போது ஆளும் கட்சியில் பெற்றுக்கொள்ள கூடிய பதவி நிலைகள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. 

மேலும் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியள்ள அந்த கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் முதலில் இணைய உள்ளனர். 

மறுபுறம் 28 இராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களிலும் திடீர் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தற்போதுள்ள அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் விடயதானங்களிலேயே இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. 

இதன் போது அமைச்சுக்குரிய நிறுவனங்களில் மாற்றங்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளில் பெயர் மாற்றங்கள் என இடம்பெறலாம் கூறப்படுகிறது. 

இந்த மாற்றங்கள் இரு வாரங்களுக்குள் இடம்பெறும் என்றே கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ள குறித்த மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கான பதவிகள் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

குறுகிய காலத்திற்கு குறித்த மூன்று கட்சிகளின் தலைவர்கள் எவ்விதமான அமைச்சுக்களை முதலில் பெற்றுக்கொள்ளாமலிருக்கவும் தீர்மானித்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள  கட்சியின் 2 ஆம் நிலை தலைவர்கள் ஏற்படவுள்ள மாற்றங்களின் போது உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter