கண்டி இடிபாடுகளினுள் சிக்கியிருந்த இருவர் சடலமாக மீட்பு, விபரம்…

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் ஐந்து மாடி ஹோட்டல் கட்டிடம் ஒன்று வீடொன்றின் மீது உடைந்து விழுந்ததில் இடிபாடுகளினுள் சிக்கியிருந்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண் கூறிய தகவல்கள்…

அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில் எழுந்து பார்க்கும் போது எனது சித்தப்பா மற்றும் அவரது மனைவி  உறங்கிக்கொண்டிருந்த எமது வீட்டின் ஒரு பகுதியின் மீதே குறித்த கட்டிடம் விழுந்திருந்ததுடன் நாமிருந்த அறை பக்கமும் கட்டிடத்தின் சிறு பகுதிகள் சிதறி கிடந்தது என சம்பவம் குறித்து இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்தார். 

கட்டிடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என் மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம். மற்றைய அறையில் எனது சித்தப்பாவும் சித்தியும் அவர்களது ஒன்றரை மாத குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது தொலைபேசிக்கு அழைத்த போதும் தொலைபேசி இயங்கவில்லை ‘ என்றார்.

அனர்தத்திற்கு முகங்கொடுத்த 60 வயதுடைய தாய் தெரிவிக்கையில்,

அதிகாலை 5 மணியளவில் பாரிய சத்தமொன்று கேட்டதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாகவே பார்த்தோம். நாம் பார்க்கும் போது கட்டிடம் முழுமையாக இடிந்திருந்தது. நாம் கூச்சலிட்ட போதும் அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்ததன் பின்னர் பொலிஸார் உடனடியாக வந்து எம் இருவரையும் மீட்டனர். எனினும் மற்றைய அறையிலேயே குழந்தையுடன் அதன் தாய் தந்தை உறங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter