ஹஜ் (2020) பயணத்தினை உறுதிப் படுத்துவதற்காக திணைக்களத்தில் வைப்புச் செய்த தொகையினை மீளளித்தல்.
கோவிட் – 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வருடம் (2020) ஹஜ் கடமையினை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் இவ்வருடம் ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்துவதற்காக மீளளிப்புச் செய்யக் தலா 25,000/= வீதம் திணைக்களத்தில் ஹஜ் கணக்கில் சுமார் 4,413 நபர்கள் வைப்புச் செய்துள்ளனர்
ஏற்கனவே 2020ம் ஆண்டு ஹஜ் செல்வதனை உறுதிப்படுத்துவதற்காக மீளளிப்புத் தொகையான ரூ. 25000 செலுத்தியவர்கள் அதனை மீளப்பெறாமல் அடுத்த வருடம் 2021ம் ஆண்டு ஹஜ் செய்ய விரும்பினால் 31/07/2020ம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறியத்தரல் வேண்டும். அத்தகையவர்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டின் மூலம் பிரதியினை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்
வைப்புச் செய்த தொகையை மீளப் பெற விரும்புவோர் கொழும்புக்கு பலமுறை பயணம் செய்ய வேண்டிய தேவை ஏற்படாத வகையில் ஹாஜிகளின் நலன் கருதி திணைக்களம் பின்வரும் ஏற்பாடுகளை செய்துள்ளது
மீளளிப்பு தொகையினைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தகவல்களை வழங்குவதற்குரிய விண்ணப்பபடிவத்தினை
www.musiimaffairs.gov.lk/form எனும் திணைக்களம் இணையத்தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்
அதற்கேற்ப மேற்குறித்த விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்
- திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ரூ. 25,000/= க்கான பற்றுச் சீட்டின் மூலப்பிரதி (Original)
- பாவனையில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகத்தின் போட்டோப் பிரதி
- தேசிய அடையாள அட்டையின் பிரதி கடவுச் சீட்டின் பிரதி
குறிப்பு: காசோலை எழுதப்படும் போது உங்களது பெயர் வங்கிக் கணக்கில் உள்ளவாறு எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி கோரப்படுகின்றது
மேற்குறித்த ஆவணங்களை பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல. 180, உ.பி. ஜாயா மாவத்தை , கொழும்பு-10 எனும் முகவரிக்கு 31/07/2020 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவு தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்..
மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்று சுமார் ஒரு மாத காலத்தினுள் வைப்புத் தொகைக்கான காசோலையானது (Cheque) உரியவரின் பெயருக்கு மாத்திரம் எழுதப்பட்டு பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களின் பெயருக்கு காசோலை எழுதுவதற்கு விதிகள் அனுமதிப்பதில்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஆகவே, வங்கிக் கணக்கில்லாதவர்கள் எதாவதொரு வங்கியில் கணக்கொன்றை ஆரம்பிப்பதனூடு இத்தொகையை கொள்ளலாம்
ஏ.பீ.எம். அஷ்ரப் பணிப்பாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இல 180 T.B ஜாயா மாவத்த, கொழும்பு-10