கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட அக்குறணை சகோதரர்களுக்கு (சிறுதொழில்) ACQ இன் உதவிக்கரம்

COVID-19 மூலம் பாதிக்கப்பட்ட சிறு தொழில்முயற்சிகளுக்கான, அக்குறணை கம்யூனிட்டி கத்தாரின் உதவிக்கரம்

கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அக்குறணை சகோதரர்களுக்கு உதவும் முகமாக, அக்குறணை கம்யூனிட்டி கத்தார் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆகவே கோவிட்-19 மூலம் தனது சிறுதொழில் முயற்சிகளில் நஷ்டமடைந்தவர்கள் மீண்டும் அந்த தொழிலை தொடர நிதி உதவி தேவைப்படுபவர்களின் தரவுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில், நீங்களும் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உங்கள் வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்திருந்தால், கீழே தரப்பட்டுள்ள தகவல்களை உள்ளடக்கியதாக ஒரு கடிதத்தை தயாரித்து
akuranacommunityqatar@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.

உங்களுக்கு மின்னஞ்சல் வசதி இல்லையென்றால், அக்குறணை 6ம் கட்டை ஸியா வைத்தியசாலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ProAds கம்யூனிகேஷனிலும் உங்கள் கடிதத்தை சமர்ப்பிக்கலாம்.

கடிதத்தில் உள்ளடங்கவேண்டியவைகள்

  1. உங்கள் வியாபாரம் பற்றிய குறிப்பு
  2. எத்தனை வருடங்கள் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்ற விபரம்
  3. தற்போதைய பொருள் கையிருப்பு
  4. எவ்வாறு உங்கள் தொழில் பாதிக்கப்பட்டது என்ற விபரம்
  5. மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதில் உள்ள பிரச்சினைகள்
  6. தற்போதைய நிதித்தேவை
  7. மேலதிக தகவல் ஏதும் இருப்பின் அவற்றையும் கடிதத்தில் உள்ளடக்கி எதிர்வரும் ஜூலை 06ம் திகதிக்கு முன் எமக்கு அனுப்பி வைக்கவும்.

மேலதிக தகவல்கள் தேவைப்படின் கீழே குறிப்பிட்டுள்ள இலக்கங்கள் மூலம் விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Zameer Nayeem : +974 7025 3797 (Call /WhatsApp)
Zaky Hameed : +974 6658 5826 (Call /WhatsApp)
ProAds :+94 77 1 333 953

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter