இதேவேளை, சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வாண்டு புனித ஹஜ் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாண்டு வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சவுதியில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஹஜ் யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளியும் பேணப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வருடாந்தம் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு செல்வதுடன், இதன் மூலம் 12 பில்லியன் டொலர்கள் வருமானத்தையும் சவுதி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.