தொலைபேசி இணைப்புக்கள் செயலிழப்பதால் முஸ்லிம் தலைமைகள் கவலை – இஸ்திஹார்

இன்று தொலைபேசியுடைய ஒவ்வொரு இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே இப்படியான ஓர் அணியுடன் முஸ்லிம் தலைமைகள் கைகோர்த்துக் கொண்டு செல்வது நிச்சயமாக எதிர்காலத்தை வீணாக்குவது மட்டுமல்ல இந்த சமூகத்தின் இருப்பை இன்னும் கேள்விக்குறியாக்கும் என்று கண்டி மாவட்டத்தில் சுயெச்சைக்கு குழு இலக்கம் 11 , வைரச்சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் இஸ்திஹார் இமாமுதீன் அக்குறணையில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு பலவீனமான தலைவர் என்று கூறித்தான் எமது முஸ்லிம் தலைமைகள் சஜித்துடன் இணைந்து புதிய ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கின்றார்கள். ரணில் ஒரு பலவீனமான தலைவர் என்று தெரிந்து கொள்ள எங்களுடைய முஸ்லிம் தலைமைகளுக்கு மூன்று தசாப்தங்கள் சென்றுள்ளன. எமது சமூக நலனைக் கருத்திற் கொண்டு சேவையாற்ற இன்னும் எத்தனை வருடங்கள் எமது முஸ்லிம் தலைமைகளுக்குத் தேவையோ தெரியவில்லை.

அதேவளையில் இன்று சஜித் பிரேமதாச இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கு ஓர் அறிக்கை விடுத்துள்ளார். இது உங்களுக்குத் தெரியவில்லையா? சஜித் பிரேமதாசவும் கூட ஒரு பலவீனமான தலைவர் என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கப்பலுடைய பயணத்திலே அந்த மாலுமியின் ஆளுமைதான் மிக முக்கியம். ஓர் ஆளுமைமிக்க பயணத்திலே தான் இந்த முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும். இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு இன்று தொலைபேசியுடைய ஒவ்வொரு இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே இப்படியான ஒரு அணியுடன் முஸ்லிம்கள் கைகோர்த்துக் கொண்டு செல்வது நிச்சயமாக எமது எதிர்காலத்தை வீணாக்குவது மட்டுமல்ல எமது சமூகத்தின் இருப்பை இன்னும் கேள்விக்குறியாக்கும்.

நாங்கள் தைரியமாக இந்த சுயாதீனக் குழு ஊடாக கண்டி மாவட்டத்தில் வைரச்சின்னத்தில் போட்டியிட களமிறங்கியுள்ளோம். நிச்சயமாக எங்களுக்கு எந்தவிதமான நிகழ்ச்சி நிரல்களும் இல்லை. எங்களுடைய ஒரே நோக்கம் சமூகம் என்ற ரீதியில் அந்த நீரோட்டத்தில் நாங்கள் 2010 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்தோம். விசேடமாக முஸ்லிம் மக்கள் வைரச் சின்னத்துக்கு வாக்களித்து ஒரு தலை சிறந்த சமூகமாக நாங்கள் இருந்தாக வேண்டும். நீங்கள் வைரச்சின்னத்துக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (தினகரன் 19-06-2020)

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter