அலவத்துகொடை பெண் கொலை சம்பவம், ஒருவர் கைது

அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரவில் தனிமையில் இருந்த 26 வயதுடைய திருமணமான பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இராணுவத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 38 வயதுடையவராவார்

இரவில் கணவன் இறுதிச் சடங்கிற்குச் சென்றிருந்தபோது தனியாக இருந்த பெண்ணின் வீட்டின் பக்கத்திலிருந்து கூச்சல் சத்தம் கேட்டதாகவும், குடிபோதையில் கணவன் துன்புறுத்துவதும் கூச்சலிடுவதும் சர்வசாதாரணமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் மேற்கொண்டு விசாரிக்கவில்லை என அப்பகுதி மக்கள் சாட்சியமளித்துள்ளனர்.

ஆனால் மரண வீட்றிற்கு சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு மனைவியின் உறவினர்கள் மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மறுநாள் காலை, இறந்த பெண்ணின் உடல் அருகில் உள்ள வயல் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட இராணுவ சிப்பாய் இராணுவத்தில் இருக்கும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைவதால் இராணுவத்தில் இலகுவான கடமைகளில் ஈடுபட்டு வந்தவர் எனவும் கூறப்படுகிறது.

கணவன் இல்லாத நேரத்தில் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்றும், அது வெளியில் தெரியாமல் இருக்க அவரைக் கொன்று சதுப்பு நிலத்தில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸ் நாய் உதவியுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சென்று சந்தேகத்திற்குரிய இராணுவ அதிகாரியின் வீட்டுக்குச் சென்று சந்தேகநபர் இருந்த அதே அறையில் போலீஸ் நாய் அமர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனுக மதுவந்தி ஜயதிலக்க என்ற 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கணவருடன் சேர்ந்து அப்பகுதியில் சில்லறை கடை நடத்தி வந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter