தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் அடிக்கல்நாட்டு விழா

கட்டடத்தை நிர்மாணித்து தர முன்வந்த பெருந்தகை அஹமத் ஷஹீத்

தெலும்புகஹவத்தை பாடசாலை வரலாற்றில் இன்றைய நாள் மறக்க முடியாத ஒரு நன் நாள் ஆகும். இந்நாளில் அல்லாஹ் எமக்கு அளித்துள்ள அருட்கொடைகளில் ஒன்றான செல்வத்தை அவனின் பாதையில் செலவழிக்க வாய்ப்பளித்துள்ளான். அனைத்துப் புகழும் அவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

இப்பாடசாலையில் நீண்ட காலக் குறைபாடாக இருந்து வந்த வகுப்பறைத் தேவை பற்றி அதிபர் ஜனாப் S. H. M. ரியால்தீன் எம்மோடு கதைத்த போது இதனை சமூகப் பணியில் இணைந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கருதி பெருமனதோடு அத்தேவையை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்தோம். அந்த வகையில் இப்பணியை செய்வதற்கு K. G. H. அஹமட் சஹீட் ஆகிய நானும் எனது மகன்மார்களான A. S. M. இல்யாஸ், மர்ஹும் A. S. M. ரம்ஸீன், A. S. ரியாஸ் முஹம்மது ஆகியோரின் ஒத்துழைப்புடன் இன்று இக் கட்டடத்திற்கான அடிக் கல்லினை நடுவதற்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக பொறுப்பெடுத்த இப்பணியை சிறந்த முறையில் செய்து முடிக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்தித்தவர்களாக இவ்வாறான ஒரு சமூகப் பணி ஆற்றுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம்.

ஒய்வு பெற்றுச் செல்லும் அதிபர் S. H. M ரியால்தீன்

துரித வளர்ச்சி கண்டு வரும் இப்பாடசாலையின் பெருங் குறையாக இருந்த விடயம் போதிய வகுப்பறைகள் இல்லாமையேயாகும்.

இந்நிலையில் இது சம்பந்தமாக அரசியல் ரீதியாகவும், வேறு வழிகளிலும் பலரை நாடியும் அடைந்து கொள்ள முடியாத ஒரு காரியமாக் காணப்பட்ட இக்குறை‌யை நிவர்த்திக்க முன்வந்த K. G. H. அஹமத் சஹீத் அவர்களையும், அவர்களது புத்திரர்களான அல்ஹாஜ் A. S. M. இல்யாஸ், மர்ஹூம் அல்ஹாஜ் A. S. M. ரம்ஸீன், அல்ஹாஜ் ரியாஸ் முஹம்மத் ஆகியோரின் இச்சேவையினை இம்மண் என்றும் மறக்காது. இது எமது சமூக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றமை அவர்களுடன் சிறு வயது முதலே பழகி வந்த எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றது.

இப்பாடசாலையின் பழைய மாணவர்களான இவர்கள் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்களிலும் நிரந்தர நன்மை தரும் பல சமூக வேலைத்திட்டங்களிலும் தம்மை அர்ப்பணித்து ஊருக்கும் நாட்டுக்கும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நன்மைகளை அருளி, பொருளாதார விருத்திகள் செய்து அதன் மூலம் தொடர்ந்தும் சமூகத்தின் விருத்திக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அத்துடன் எனது சேவைக் காலத்தில் பல்வேறு வகையிலும் உதவிகள் புரிந்த சகலருக்கும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் சங்கம், தக்வா மஸ்ஜித் நிர்வாகம், We Care Welfare Association, Faizal Foundation, பிரதி அதிபர் Mrs R F ரியாஸா, ஆசிரியர்கள், மாணவர்கள் ஏனைய ஆளணியினர்கள் மற்றும் மத்திய மாகாண மேலதி கல்விப் பணிப்பாளர் A.L.M. ஸாருதீன் அவர்களுக்கும் ஏனைய கல்விப் பணிப்பாளர்களுக்கும் என் இதய பூர்வ நன்றிகள் என்றும் நிறைவாக உரித்தாகட்டும்.

அதிபராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி R.F.ரியாஸாவின் ஆசிச் செய்தி

ஒரு பாடசாலையின் அபிவிருத்தியில் அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஏனைய நலன் விரும்பிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் எமது பாடசாலையின் வளர்ச்சியில் கடந்த 13 வருட காலமாக பெறும் பங்காற்றிய எமது அதிபர் S.H.M. ரியால்தீனின் சேவை அளப்பரியது. அவரது முயற்சியால் அண்மைக் காலங்களில் துரித எழுச்சிப் பாதையில் செல்லும் ஆரம்பப் பாடசாலையான தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் அதன் வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு அடைவைப் பெற்று வரும் இச்சந்தர்ப்பத்தில் இச்செய்தியை வழங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு முதற் கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல வித்தியாசமான பெறுமதி மிக்க செயற்றிட்டங்களை முன்னெடுத்து வரும் எமது தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் ஒரு மாதிரி ஆரம்பப் பாடசாலையாக மிளிரும் இக்கட்டத்தில் இப்பாடசாலையின் பெருங் குறையாக இருந்தது வகுப்பறை கட்டடமே.

இக்குறை‌யை முன் வந்து நிவர்த்தி செய்து தரும் அல்ஹாஜ் K. G. H. அஹமத் சஹீத், அவர்களது புத்திர்களான அல்ஹாஜ் A. S. M. இல்யாஸ், மர்ஹூம் அல்ஹாஜ் A. S. M. ரம்ஸீன், அல்ஹாஜ் ரியாஸ் முஹம்மத் ஆகியோரையும் எமது பாடசாலைச் சமூகம் என்றும் மறக்காது.

இப்பாடசாலையின் பழைய மாணவர்களான இவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நன்மைகளை அருளி, அதன் மூலம் தொடர்ந்தும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இவர்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவிகள் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் முஜாஹித்

நன்கு திட்டமிட்டு வளர்ச்சிப் பாதையில் வேகமாகப் பயணிக்கும் தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம் அதன் வளர்ச்சிப் பாதையில் மற்றுமொரு தடயத்தைப் பதித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் இச்செய்தியை வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.

பல துறைகளிலும் துரித வளர்ச்சி அடைந்து வரும் இப்பாடசாலையின் பெருங் குறையாக இருந்த வகுப்பறைத் தேவையை அடைந்து கொள்ள பெரும் முயற்சிகள் பல செய்தும், அரசியல் ரீதியாகவும், வேறு வழிகளிலும் பலரை நாடியும் அடைந்து கொள்ள முடியாத ஒரு காரியமாகக் காணப்பட்ட இக்குறை‌யை நிவர்த்தி செய்து தர முன் வந்த K.G.H. அஹமத் சஹீத் அவர்களையும், அவர்களது மகன் மார்களான A.S.M. இல்யாஸ், மர்ஹூம் A.S.M.ரம்ஸீன், ரியாஸ் முஹம்மத் ஆகியோரின் இச்சேவையினை நாம் பெரு மனதுடன் வரவேற்கின்றோம்.

இது எமது சமுதாயத்தினருக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது .

இவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நன்மைகளை அருளி, அதன் மூலம் தொடர்ந்தும் நன்மைகள் செ‌ய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அத்துடன் எமது பாடசாலையை பல்வேறு வகையிலும் முன்னேற்றி அதன் புகழ் ஓங்கிட அயராது உழைத்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் S.H.M Riyaldeen அவர்களுக்கு எமது இதய பூர்வ நன்றிகள் என்றும் நிறைவாக உரித்தாகட்டும்.

தினகரன் 03/01/2023

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter