ஜும்ஆ பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடாத்துவதா?

ஜும்ஆ பள்ளிகளில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடாத்துவதா? தீர்மானத்தை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது வக்பு சபை

ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே ஜும்ஆ தொழுகைகள் நடாத்தப்பட வேண்டும் எனும் ஆலோசனை தொடர்பில் வக்பு சபை அடுத்த வாரம் தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

நாட்டில் இயங்கிவரும் ஜும்ஆ பள்ளி வாசல்களில் மாத்திரமே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட வேண்டுமென அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை, சூராகவுன்ஸில் ஷூரீஆ கவுன்ஸில், சூபி . தரீக்காக்களின் உயர் பீடம் (Scot) என்பன ஏகமனதாக தீர்மானித்துள்ளன. இத் தீர்மானம் அண்மையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் தலைமையில் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அறிவிக்கப்பட்டது.

இதேவேளை நேற்று முன் தினம் நடைபெற்ற வக்புசபைக் கூட்டத்தில் இத்தீர்மானம் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரிகளிடமிருந்து இது தொடர்பான அறிக்கைகளை வக்பு சபையினால் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

‘வக்பு சபை இது தொடர்பில் ஆராய்ந்து, அபிவிருத்தி உத் தியோகத்தர்களின் அறிக்கை களையும் பரிசீலித்து அடுத்த வாரம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றினை வெளியிடும்’ என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்று பரவிய காலத்தில் சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விதிமுறைகள் பள்ளிவாசல்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஜும்ஆ பள்ளிவாசல்கள் அல்லாத பள்ளிவாசல்கள் தக்கியாக்கள், ஸாவியாக்களில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கொவிட் 19 தொற்றிலிருந்து நாடு மீட்சி பெற்றதும் அவ்வாறான பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்களில் ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டது என்றாலும் சில பள்ளிவாசல்களில் தொடர்ந்தும் ஜும்ஆ தொழுகை நடாத்தப்படுகிறது.

இதனையடுத்தே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்த வாரம் குறிப்பிட்ட நான்கு முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடியது. இக்கலந்துரையாடலின் பின்பு நான்கு நிறுவனங்களும் ஜும்ஆ பள்ளிவாசல்களில் மாத்திரமே ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட வேண்டும் என்று ஏகோபித்து தீர்மானித்தன.

இத்தீர்மானம் திணைக்கள பணிப்பாளரினால் வக்பு சபைக்கு அனுப்பிவைக்கப்பட் டது. உலமா சபையின் பத்வா குழுவும் ஏற்கனவே வக்பு சபையுடன் கலந்துரையாடலொன்றினை நடாத்தியிருந்தது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி இதழ் 24/11/2022 பக்கம் 01

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter