2023 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 2022.11.17 ஆம் திகதி முதல் பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
கட்டண வகை | பழைய கட்டணம் | புதிய கட்டணம் | |
ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகக் கட்டணம் | 15,000 | 20,000 | |
ஒரு நாள் சேவையின் கீழ் 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு 03 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு விநியோகம் | 7,500 | 9.000 | |
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகக் கட்டணம் | 3,500 | 5,000 | |
சாதாரண சேவையின் கீழ் 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு 03 வருடங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு விநியோகம் | 2,500 | 3,000 | |
விநியோகிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் காணாமல் போன கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் தண்டப்பணம் | 11,500 | 20,000 | |
விநியோகிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்திற்குள் காணாமல் போன கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் தண்டப்பணம் | 11,500 | 15,000 | |
விண்ணப்பதாரியின் வேண்டுகோளின் பேரில் கடவுச்சீட்டில் திருத்தம் செய்தல் | 1,000 | 1,200 | |
கடவுச் சீட்டுக்களை வெளிநாடுகளுக்கு கூரியர் செய்வதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கான கட்டணம் | 1,150 | 2,000 | |
வெளிநாட்டு தூதரகங்கள் இல்லாத நாடுகளில் இருந்து நேரடியாக கடவுச்சீட்டை விண்ணப்பித்தல் | 23,200 | 40,000 | |
வெளிநாட்டு தூதரகங்கள் இல்லாத நாடுகளில் இருந்து நேரடியாக கடவுச்சீட்டை விண்ணப்பித்தல் (கடவுச்சீட்டு காணாமல் போன சந்தர்ப்பங்களில்) | 50,000 | 70,000 |