ஹஜ், உம்ராவுக்கு சவூதி செல்வோருக்கு மஹ்ரமான துணை அவசியமில்லை சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சர் தெளபீக் அல் ராபியா
சவூதிக்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை மேற்கொள்ளும் பெண்கள் மஹ்ரம் (இரத்த உறவு)
துணையுடனே பயணிக்க வேண்டும் என இதுவரை காலம் சவூதி அரேபியா விதித்திருந்த நிபந்தனை தளாத்தப்பட்டுள்ளது.
உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் சவூதி அரேபியாவுக்கு ஹஜ், உம்ரா யாத்திரை மேற்கொள்ளும் பெண்களுக்கு மஹ்ரம் துணை அவசியமில்லை என சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சர் கலாநிதி தெளபீக் அல் ராபியா தெரிவித்துள்ளார்.
மூஸ்லிம் பெண் யாத்திரிகர்கள் மஹ்ரம் துணையுடன் தான் பயணிக்க வேண்டுமா? இல்லையா? எனும் சர்ச்சைக்கு ஹஜ், உம்ரா அமைச்சர் தீர்வு வழங்கியுள்ளார்.
கெய்ரோவிலுள்ள சவூதி தூதரகத்தில் கடந்த இங்கட்கிழமை ஊடக மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். அமைச்சர் தெளபீக் அல் ராபியா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம்கள் உம்ரா யாத்திரையை மேற்கொள்வதற்கு சவூதி அரசினால் விசா வழங்குவது தொடர்பில் கோட்டா முறை அமுல்படுத்தப்படமாட்டாது. அதிகபட்ச எண்ணிக்கையும் நிர்ணயம் செய்யப்படமாட்டாது. சவூதி அரேபியாவுக்கு வருகை தரும் எந்த நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் என்றாலும் எந்த வகை விசாவின் &ழ் வருகை தந்தவர் என்றாலும் உம்ரா யாத்திரை மேற்கொள்ள முடியும்.
சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்கான செலவு களைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறான செலவுகளைக் குறைப்பது பல விடயங்களில் தங்கியுள்ளது.
சவூதி அரேபியா அண்மையில் மக்கா மற்றும் மதீனாவிலுள்ள புனித பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்பவர்களின் நலன் கருதி பல் வேறு புதிய நடைமுறைகளை
அமுல்படுத்தியுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலின் &ழ் யாத்திரிகர்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தின் 8ழ் யாத்திரிகர்களுக்கும், பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களுக்கும் விரைவான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 24 மணிநேரத்துக்குள் விசா பெற்றுக் கொள்ளும் வகையில் உம்ரா அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது. என்றார்.
மேலும் மக்கா புனித ஹரம் பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்காக 200 பில்லியனுக்கும் ௮திகமான சவூதி ரியால்கள் செலவாஇியுள்ளது. புனித பள்ளிவாசலின் வரலாற்றில் இது எப்போதுமில்லாத பாரிய விஸ்தரிப்பு பணியாகும் என்றார்.
(ஏ.ஆர். ஏ. பரீல்- விடிவெள்ளி பத்திரிகை 13/10/22 )