பொதுவான யாப்பின் கீழ் இயங்குமாறு சகல பள்ளிகளையும் கோர முடியாது

நாட்டில் இயங்­கி­வரும் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்து அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுத்­த­போதும் நாட்­டி­லுள்ள பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்­துப்­பள்ளிவாசல்­க­ளையும் பொது­வான யாப்­பொன்றின் கீழ் இயங்கச் செய்­ய­மு­டி­யாது. இது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்­றது என வக்பு சபை தெரி­வித்­துள்­ளது.

நாட்டில் பெரும்­பா­லான பள்­ள­வா­சல்கள் யாப்பு இன்றி இயங்­கி­வ­ரு­வதால் பல்­வேறு குழப்­பங்கள் பதி­வாகி வரு­கின்­ற­மையை அடுத்தே திணைக்­களம் பொது­வான யாப்பின் அவ­சி­யத்தை முன்­வைத்­தி­ருந்­தது. அத்­தோடு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மாதிரி யாப்­பொன்­றினை வடி­வ­மைத்து அந்த வரை­பினை வக்பு சபையின் அனு­ம­திக்­காக அனுப்பி வைத்­தி­ருந்­தது. எதிர்­வரும் இரண்டு மாத காலத்­துக்குள் இச்­செ­யல்­திட்டம் அமு­லுக்கு வரும் என திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

மேலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பொது­வான யாப்­பொன்­றினை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் திணைக்­களத்திற்கு வக்பு சபை இது­வரை அனு­மதி வழங்­க­வில்லை. தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தி­ருந்தார்.

‘விடி­வெள்ளி’ இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரி­யது. அவர் பதி­ல­ளிக்­கையில்,

‘நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தின் கீழ் நாடெங்­கு­முள்ள பள்­ளி­வா­சல்­களை பொது­வான ஒரு யாப்பின் மூலம் இயங்கச் செய்ய முடி­யாது. இது நடை­முறை சாத்­தி­ய­மற்­றது. வக்பு சட்­டத்­தின்­படி யாப்பு ஒன்று கட்­டா­ய­மில்லை. பள்­ளி­வா­ச­லுக்­கான யாப்பு ஒன்று யாப்பு அப்­பி­ர­தே­சத்தின் சம்­பி­ர­தா­யங்கள், பாரம்­ப­ரி­யங்கள் என்­ப­ன­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கவே அமைய வேண்டும். அத்­தோடு வக்பு சட்டம் மற்றும் நிபந்­த­னை­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருக்க வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களின் டிரஸ்டி நிய­மனம் உட்­பட செயற்­பா­டுகள் அவ்­வப்­ப­குதி சம்­பி­ர­தாயம், மற்றும் நடை­மு­றை­க­ளின்­ப­டியே நடக்­கி­றது. உதா­ர­ணத்­துக்கு கிழக்கில் பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்கள் டிரஸ்டி நிய­மனம் குடி, மரிக்கார் பரம்­ப­ரையை உள்­ள­டக்­கி­ய­தா­கவே இடம்­பெ­று­கி­றது. அத்­தோடு பத்­வா­க­மிட்­டியும் இயங்­கி­வ­ரு­கி­றது. அமெ­ரிக்­காவில் ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை தெரிவு செய்­வது போன்ற முறையே இங்கு பின்­பற்­றப்­ப­டு­கி­றது என்று கூறலாம். எனவே பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கங்கள் பிர­தே­சத்­துக்கு பிர­தேசம் பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பள்ளிவாசல் வித்தியாசமானதாகவே அமைந்துள்ளது.
எனவே அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவான யாப்பொன்றினை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாது. இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சட்ட அதிகாரிக்கு தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதற்கு மாற்று வழி தொடர்பாக ஆராய வேண்டும் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 06/10/2022 ( பக்கம் -01 )

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter