ஞானசாரருக்கு மரியாதை! முஸ்லிம்களுக்கு அவமரியாதை!!

‘‘முஸ்­லிம்கள் எங்­கி­ருந்தோ வந்த அக­திகள். பயங்­க­ர­வா­திகள். இலங்கை ஓர் பெளத்த நாடு. முஸ்­லிம்­க­ளுக்கு இங்கு இட­மில்லை. அவர்­களை சவூதி அரே­பி­யா­வுக்கு விரட்­டி­ய­டிக்க வேண்டும், சவூதி அரே­பி­யர்கள் வஹா­பி­ஸ­வா­தி­கள் ­என கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை இலங்­கை­யி­லுள்ள சவூதி தூது­ரகம் கெள­ர­வித்­தி­ருக்­கி­றது.

சவூதி அரே­பி­யாவின் 92 ஆவது தேசிய தின நிகழ்­வுக்கு ஞான­சார தேரர் கடந்த 23 ஆம் திகதி அழைக்­கப்­பட்­டி­ருந்தார். சவூதி தூத­ரகம் அவரை கெள­ர­வித்­தி­ருக்­கி­றது. விருந்து வழங்­கி­யி­ருக்­கி­றது.

கொழும்பு சங்­கி­ரில்லா ஹோட்­டலில் நடை­பெற்ற சவூதி தேசிய தின நிகழ்வில் ஞான­சார தேரரும் அதி­தி­வ­ரி­சையில் வெட்­க­மில்­லாமல் அமர்ந்­தி­ருந்தார்.
அல்­லாஹ்­வையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் நிந்­தித்­தவர் அவர். புனித குர்­ஆனை அவ­ம­தித்­தவர் அவர். அந்­நிய மதத்­த­வர்­களை, இஸ்­லா­மி­யர்­களை எதிர்ப்­ப­வர்­களை கொலை செய்­யு­மாறு குர்ஆன் போதித்­துள்­ளது என வாய்­கி­ழிய கத்தி­ய­வரே ஞான­சார தேரர்.

நிகழ்வில் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, நீதி­ய­மைச்சர் கலா­நிதி விஜே­தாச ராஜ­பக்ஷ, சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல, அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, சபா­நா­யகர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யூதீன், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள்,முப்­ப­டை­களின் உயர் அதி­கா­ரிகள், அரச உயர் அதி­கா­ரிகள் வருகை தந்­தி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப்­ஹக்கீம் மற்றும் ரிசாத் பதி­யுதீன் ஆகியோர் உணவு உண்ணும் பிர­தான வி.ஐ.பி.மேசையில் அம­ர­வில்லை. அவர்கள் குறு­கிய நேரமே நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது.
நிகழ்வில் ஞான­சார தேர­ருடன் ஹுணுப்­பிட்டி கங்­கா­ரா­மய பன்­ச­லையின் பிர­த­ம­குரு கலா­நிதி கிரிந்தே அஸ்­ஸாஜி தேரரும் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஞான­சார தேரர்
சவூதி அரே­பி­யாவின் தேசிய தின நிகழ்வில் ஞான­சார தேரர் கலந்து கொண்­ட­மைக்கு சமூக வலைத்­த­ளங்­க­ளிலும், முகநூல் பக்­கங்­க­ளிலும் பல்­வேறு விமர்­ச­னங்கள் பதி­வாகி வரு­கின்­றன. கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கோஷ­மிட்­டு­வந்த ஞான­சா­ர­தே­ரரை குறிப்­பாக அல்­லாஹ்­வையும் அல்­லாஹ்வின் தூத­ரையும் குர் ஆனையும் அவ­ம­தித்த அவரை தேசிய தின நிகழ்­வுக்கு அழைத்து அமர வைத்த சவூதி தூத­ர­கத்­துக்கு, எதி­ரா­கவும் கண­ட­னக் குரல்கள் வலுத்து வரு­கின்­றன.

“நான் சவூதி அரே­பி­யாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்­டமை குறித்து ஊட­கங்­களே விமர்­சிக்­கின்­றன. மக்­களைக் குழப்­பி­ய­டிக்­கின்­றன. சமூக ஊட­கங்­களில் குறிப்­பாக முகநூல்­களில் வெளி­யி­டப்­படும் விமர்­ச­னங்கள் மற்றும் பழிச்­சொற்கள் தொடர்பில் நான் அலட்டிக் கொள்­ளப்­போ­வ­தில்லை’’ என ஞான­சார தேரர் தெரி­வித்துள்­ளார். நிகழ்வில் விசேட அதி­தி­யாக கலந்து கொண்­டமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

சமூக ஊட­கங்கள் மற்றும் முகநூல் பதி­வுகள் தொடர்பில் அவர் கருத்துத் தெரி­விக்­கையில், ‘‘எவரும் என்னை விமர்­சிக்­கலாம். கேலி செய்­யலாம். அவர்கள் பற்றி யாருக்குக் கவலை? தேவை­யான அளவு விமர்­சித்துவிட்டோம். கேலி செய்து விட்டோம் என அவர்கள் நினைக்­கும்­போது விமர்­ச­னத்தை நிறுத்­திக்­கொள்­வார்கள். எமது நாட்டு மக்­க­ளுக்கு விமர்­சிப்­ப­தற்கும் கேலி செய்­வ­தற்கும் மாத்­தி­ரமே தான் தெரியும்’’ என்றார்.
ஞான­சார தேரர் இந்­நாட்டின் சிறு­பான்மை மக்கள் மீது குறிப்­பாக முஸ்­லிம்கள் மீது தொடர்ந்து வெறுப்புப் பேச்­சுக்­களை வெளி­யிட்டு வந்­தவர். இவர் பற்றி முழு நாடும் அறியும். இவ்­வா­றான ஒரு­வரே சவூதி தூது­வ­ரினால் நிகழ்­வுக்கு விசேட அதி­தி­யாக அழைக்­கப்­பட்­டி­ருந்தார். ஞான­சார தேரர் நிகழ்வில் கலந்து கொண்­ட­த­னை­ய­டுத்து முகநூல் பக்­கங்­க­ளிலும், சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் அவரை கேலி செய்யும் வகை­யி­லான பதி­வுகள் வெளி­யி­டப்­பட்­டன. ஞான­சார தேரரை சவூதி அரே­பி­யாவின் தேசிய தின வைப­வத்தில் கலந்து கொள்ள அழைத்­தமை முஸ்லிம் சமூ­கத்தை அகெ­ள­ர­வப்­ப­டுத்­தி­யமை என அப்­ப­தி­வுகள் தெரி­வித்­துள்­ளன.

இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ர­கத்­துக்கு அவர்­க­ளது தேசிய தின நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்கு ஞான­சார தேரரைத் தவிர வேறு யாரும் இருக்க வில்­லையா?
நிகழ்­வுக்கு அழைக்­கப்­பட்ட ஞான­சார தேரர் பல­வ­ருட கால­மாக முஸ்லிம் சமூ­கத்தை இன ­ரீ­தி­யாக எதிர்த்து வந்­தவர். இன வன்­செ­யல்­களைத் தூண்­டியர். இவ்­வா­றான ஒருவர் சவூ­தியின் தேசிய நிகழ்­வுக்கு எந்த அடிப்­ப­டையில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார் என முகநூல் பக்­கங்­களும், சமூக வலைத்­த­லங்­களும் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தன.

ஞான­சார தேரர் மேலும் சில பெளத்த குரு­மார்­களை இணைத்துக் கொண்டே பொது­பல சேனா என்ற அமைப்பை நிறு­வினார். இலங்­கையைப் பாது­காப்­ப­தற்கும், பெளத்த மதத்தை பாது­காப்­ப­தற்கும் என உரு­வாக்­கப்­பட்ட பொது­பல சேனா அமைப்பு நாள­டைவில் ஓர் இன­வாத அமைப்­பாக மாற்றம் கண்­டது. இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் ஞான­சார தேரரின் அமைப்பு எதிர்த்­தது.

இலங்கை பெளத்த நாடு. பெளத்­தர்­க­ளுக்கு மாத்­தி­ரமே நாடு சொந்­த­மா­னது. ஏனைய மதத்­தினர் பெளத்­தர்­களின் கட்­டுப்­பாட்டின் கீழ் வாழ முடி­யு­மென்றால் வாழலாம். இல்­லையேல் வெளி­யேறிச் செல்ல வேண்டும் என்று ஞான­சார தேரர் சூளு­ரைத்தார். குறிப்­பாக முஸ்­லிம்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு நாடு கடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றார்.
இலங்­கையின் பிரச்­சி­னை­க­ளுக்கு வெளி­நாட்டில் இருந்து குடி­யே­றி­ய­வர்­களே காரணம் என்றார்.

2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை இறுதி அறிக்­கை­யிலும் ஞான­சார தேரரின் வெறுப்புப் பேச்­சு­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொட­ரப்­பட வேண்டும் என பரி­ந்து­ரைக்­கப்­பட்டுள்­ளது. ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொட­ராக வெறுப்பு பேச்­சு­களை வெளி­யிட்டார். வஹா­பிஸ கொள்­கை­களை எதிர்த்து முஸ்லிம் சமூ­கத்தைப் பொது­வாக எதிர்த்து வந்தார் என அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு ஞான­சார தேரரின் பொது­பல சேனா அமைப்பு தடை செய்­யப்­பட வேண்டும். அவருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

இவ்­வா­றான ஒரு­வர்தான் சவூதி அரே­பி­யாவின் தேசிய தின நிகழ்­வினை அலங்­க­ரித்­தி­ருக்­கிறார்.

இது மாத்­தி­ர­மல்ல பதவி வில­கிய முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ அவரின் எண்­ணக்­க­ரு­வான ‘ ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனபாதிபதியின் செயலணியின் தலைவராக நியமித்திருந்தார். இச்செயலணியின் இறுதி அறிக்கை முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இறுதி அறிக்­கையில் முஸ்­லிம்­களின் உரி­மை­களை பறித்­தெ­டுக்கும் வகை­யி­லான இன ரீதி­யான சிபா­ரி­சு­க­ளையே அவர் முன்­வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஞான­சார தேரரை நிகழ்வில் உள்­வாங்கிக் கொள்­வ­தற்கு முன்பு இலங்­கையின் சவூதி தூத­ரகம் முஸ்லிம் சமூ­கத்­த­லை­வர்­களின் மதத்­த­லை­வர்­களின் ஆலோ­ச­னையைப் பெற்­றி­ருக்க வேண்டும். சவூதி தனது தேசிய நிகழ்­வுக்கு ஞான­சார தேர­ரரை அழைத்­ததன் மூலம் இலங்கை முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மன்றி இந்­நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையை விரும்­பு­கின்ற சகல மக்­க­­ளையும் அகெ­ள­ர­வப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் ஞான­சார தேர­ரை சவூதி தனது நாட்­டுக்கு அழைத்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தது. தற்­போது அவரை தமது நிகழ்­வொன்றுக்கு அதி­தி­யாக அழைத்­துள்­ளது. தேர­ருடன் சவூதி தூத­ரகம் நெருக்­க­மான உறவைப் பேணு­வது ஏன் என்ற கேள்­வியை பலரும் எழுப்­பு­கின்­றனர். இதற்கு தூத­ர­கம் பதி­ல­ளிக்க கட­மைப்­பட்­டுள்­ள­து. – Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி பத்திரிகை 29/9/2022 ( பக்கம் – 05 )

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter