அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம், பொதுவான பரீட்சை

நாடெங்கும் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிகள் பொது­வான பாட­வி­தானம் மற்றும் பொது­வான பரீட்­சையின் கீழ் ஒன்­றி­ணைக்­கப்­ப­ட­வுள்­ளன.

அர­புக்­கல்­லூ­ரி­களில் பொது­வான பாடத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும், பொது­வான பரீட்சை நடாத்­து­வ­தற்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. முஸ்லிம் துறைசார் அறி­ஞர்­களால் பாடத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அப்­பா­டத்­திட்டம் அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­தோடு கடந்த 5 வருட கால­மாக இடைநிறுத்­தப்­பட்­டி­ருந்த மெள­ல­வி­க­ளுக்­கான அல் ஆலிம் பரீட்சை நடத்­த­ப்ப­ட­வுள்­ளது. இப்­ப­ரீட்­சையை ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தற்கு பரீட்சை திணைக்­களம் இணங்­கி­யுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.
இதே­வேளை கடந்த 3 வரு­ட ­கா­ல­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அஹ­தியா பரீட்­சையை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அஹ­தி­யா­வுக்­கான பாடத்­திட்­டமும் வடி­வ­மைக்­கப்­ப­ட­வுள்ளன. நாடெங்கும் 313 அஹ­தியா பாட­சா­லைகள் உள்­ளன. இப்­பா­ட­சா­லைகள் விரி­வுப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

அஹ­தியா பாட­சா­லை­களை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அஹ­தியா சம்­மே­ள­னத்­துடன் இணைந்து ஒரு ஒழுங்கு முறையின் கீழ் நடாத்­து­வ­தற்கு திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் தெரி­வித்தார்.

நாட்டின் 313 அஹ­தியா பாட­சா­லை­களில் சுமார் 61 ஆயிரம் மாண­வர்கள் பயில்­கி­றார்கள். இம்­மா­ண­வர்கள் சீரு­டை­க­ளுக்­கா­கவும் புத்­த­கங்­க­ளுக்­கா­கவும் அர­சாங்கம் வரு­டாந்தம் 3 கோடி 50 இலட்சம் ரூபாய்­களை செலவு செய்­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

வவு­னியா,முல்­லைத்­தீவு,மற்றும் மன்னார் மாவட்­டங்­களில் அஹ­தியா பாட­சா­லைகள் இயங்­கு­வ­தில்லை. இம்­மா­வட்­டங்­க­ளிலும் அஹ­தியா பாட­சா­லை­களை நடாத்­து­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது.

இந்­நி­லையில் திணைக்­களம் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து மேல­திக உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
குர்ஆன் மத்­ர­ஸா­வுக்­கான புதிய பாடத்­திட்டம் மீளாய்வு செய்­யப்­பட்டு அங்­கீ­கா­ரத்­துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்..

(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 29/9/2022 ( பக்கம் -02 )

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter