முஸ்லிம் விவாக,விவாகரத்து சட்டத்தின் கீழ் திருமண வயதெல்லையை 18 ஆக நிர்ணயிக்கப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதியமைச்சு இதற்கான அரசாங்க வர்த்தமானியை வெளியிடவுள்ளது.
இதேவேளை கண்டிய விவாக,விவாகரத்து சட்டத்தின் கீழ் திருமண வயதெல்லையும் 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாங்க வர்த்தமானி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு 18 வயதுக்கு கீழானவர்கள் போலி உறுதிமொழிகளை வழங்கி, அல்லது போலி ஆவணங்களை வழங்கி திருமணம் செய்து கொண்டால் அவர்களை தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன..
(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 29/9/2022 ( பக்கம் – 01)